என்எஸ்ஏ எல்லாம் போடுறாங்களே.. ஸ்டிரிக்ட் காட்டிய ஸ்டாலின்.. பதறும் "வதந்தி" தலைகள்.. பரபர பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய நபர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் பொய்யாக பல வீடியோக்கள் வேகமாக பரவின. பீகாரில் இந்த வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ஈரோடு, நாமக்கல், கோவையில் வேலை பார்க்கும் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் பரவி வருகின்றன.

பீகார் மாநில எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகதான் இந்த விவகாரத்தில் முதலில் பிரச்னையை கிளப்பியது. வட இந்தியர்களை தமிழர்கள் குறி வைத்து தாக்குவதாகவும், கொலை செய்வதாகவும் பொய்யான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று அம்மாநில சட்டசபையில் அமளி செய்தது. இதற்கு பொய்யான வீடியோக்களையும் ஆதாரமாக காட்டியது.
இதனை தடுக்காமல் பீகார் மாநில அரசு, தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து வேடிக்கை பார்க்கிறது என்றும் பொய்யான வீடியோக்களை பாஜக காட்டி அமளி செய்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் வட இந்தியர்கள், முக்கியமாக பீகார் மக்கள் தாக்கப்படுவதாக வைக்கப்படும் பொய்யான புகார்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவி வந்தது.
இந்த இரண்டு வீடியோவில் ஒன்று, பீகார்-ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மோதல் சம்பவம். அது இங்கே நடக்கவே இல்லை. மற்றொன்று தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குள் நடத்திக்கொண்ட சண்டை. இதைத்தான் பொய்யாக தமிழ்நாடு சம்பவம் என்று இவர்கள் பரப்பி வருகிறார்கள். முக்கியமாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி தமிழ்நாடு வந்த நிலையில், அவருக்கு அழுத்த தர வேண்டும் என்று பாஜக சார்பாக அம்மாநில சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக வதந்தி பரப்பிய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பொய்யான செய்திகளை பரப்பிய மனிஷ் காஷ்யப் என்ற வதந்தி யு டியூபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாடு போலீசார் மூலம் கைது செய்யப்பட்ட இவர் 30 வீடியோக்களை பொய்யாக உருவாக்கி பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தற்போது மனிஷ் காஷ்யப் மீது என்எஸ்ஏ வழக்கும் போடப்பட்டு உள்ளது. அதாவது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்.. கலவரத்தை தூண்ட முயன்றதாக இவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது .
இந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பிய மேலும் பலர் கடும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடம் அல்லது அதற்கு மேலும் கூட என்எஸ்ஏ சட்டத்திற்கு கீழ் போலீசார் ஒருவரை சிறையில் அடைக்கலாம் என்பதால் மனிஷ் காஷ்யப் கைது இதே விவகாரத்தில் வதந்தி பரப்பிய பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் மீது என்எஸ்ஏ பாயும் என்ற அச்சத்தில் பலர் இருக்கிறார்களாம்.
ஓபிஇந்தியா செய்தி நிறுவனத்தின் ராகுல் ரோஷன், நுபுர் சர்மா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநின்றவூர் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர். அடுத்து இவர்களும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் ரோஷன் அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆவார். அதேபோல் நுபுர் சர்மா அதன் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி நிறுவனம் தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யாக செய்தி வெளியிட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. பொய்யான செய்திகளையும், வீடியோக்களையும் இவர்கள் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய நபர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால் அடுத்து பலர் கஃபைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications