சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பழசை எல்லாம் கிளறி?".. இபிஎஸ் சொன்ன வார்த்தை.. மொத்தமாக திரும்பி வந்த அஸ்திரம்.. எதிர்ப்பாமே?

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தை ஒன்றால் அதிமுகவிற்கு உள்ளேயே அவருக்கு எதிராக சில முணுமுணுப்புகள் எழ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிடலாம் என்று சசிகலா தீவிரமாக முயன்று வருகிறார். தொடக்கத்தில் அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு வந்த சசிகலா தற்போது நேரடியாக பேட்டிகளில் இறங்கி உள்ளார்.

அதிமுகவில் தனது லெகசி எப்படி இருந்தது , ஜெயலலிதாவுடனான நட்பு, அரசியலில் தான் கடந்து வந்த பாதைகள் என்று சசிகலா முக்கியமான விஷயங்களை நினைவு கூர்ந்து அதிமுகவினர் மத்தியில் ஸ்கோர் செய்யும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டு வருகிறார்.

இது லிஸ்ட்லயே இல்லையே.. அதிமுக மாஜி சீனியர் அமைச்சரை தட்டி தூக்கிய திமுக.. வந்தார் வ.து. நடராஜன்! இது லிஸ்ட்லயே இல்லையே.. அதிமுக மாஜி சீனியர் அமைச்சரை தட்டி தூக்கிய திமுக.. வந்தார் வ.து. நடராஜன்!

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அவ்வப்போது அதிமுகவின் தற்போதைய தலைமைகள் குறித்தும் விமர்சனங்களை வைத்து வருகிறார். அதிமுகவில் தற்போது சரியான தலைமை இல்லை. அதிமுக தலைமை வலுவாக இருந்திருந்தால் கட்சி தோல்வி அடைந்து இருக்காது. நல்ல தலைமை இல்லாததால் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிவிட்டது.

தலைமை

தலைமை

நான் அதிமுக தலைமை ஏற்றபின் மீண்டும் கட்சி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று சசிகலா பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு வருகிறார். அவரின் ஆடியோவிலும், பேட்டிகளிலும் இதே விஷயத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வருகிறார். இந்த நிலையில்தான் சசிகலாவின் இந்த பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்து இருந்தார்.

பதிலடி

பதிலடி

சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. அவரால் கட்சிக்குள் எக்காலத்திலும் வர முடியாது. அவர் அதிமுகவில் இருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. அவர் இருந்த போதும் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை மறக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து இருந்தார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே சில முணுமுணுப்புகள் எழ தொடங்கி உள்ளதாம். அதிமுகவின் தோல்வி குறித்து எடப்பாடி பேசியது அவருக்கே இப்போது எதிராக திரும்பி உள்ளதாம். சசிகலா தலைமை வகித்தால் அதிமுக வெற்றிபெறாது என்று சொல்வது சரி. ஆனால் சசிகலா இருந்த போதும் அதிமுக தோல்வி அடைந்ததாக முந்தைய தேர்தல்களை குறிப்பிட்டு பேசியது தவறு. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனராம்.

பழைய தோல்வி

பழைய தோல்வி

சசிகலா பற்றி பேசும்போது அதிமுகவின் பழைய தோல்விகளை பற்றி ஏன் கிளற வேண்டும். இது அதிமுகவிற்கு எதிரான கருத்து. ஜெயலலிதாவில் லெகசிக்கு எதிரான கருத்து இது என்று எடப்பாடிக்கு எதிராக சில நிர்வாகிகள் முணுமுணுத்ததாக கூறப்படுகிறது. அதாவது சசிகலாவை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு ஜெயலலிதாவின் ஆளுமைக்கு எதிராக இந்த கருத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்றும் கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.

சசிகலா அதிமுக

சசிகலா அதிமுக

அதிமுகவில் சசிகலா இருந்த காலத்தை பற்றி பேசாமல் இருப்பதே நல்லது, பழைய விஷயங்களை எல்லாம் கிளறினால் அது சசிகலாவிற்குதான் சாதகமாக முடியும் என்று மூத்த நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு அறிவுறுத்தி உள்ளனராம். சசிகலாவின் பேச்சுகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்க்க வேண்டும். பதில் சொன்னால்தான் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் என்று இபிஎஸ்ஸுக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலர் அவருக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Not in a good taste: AIADMK cadres not so happy with Edappadi Palanisamy's statement against Sasikala say sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X