சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தலில்.. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியா? கூட்டணியா?.. சீமானின் பதில் இதுதான்!

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை போராட்ட வீர்ர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.

 பிரம்மதேசம் கைலாசநாதர் ஆலயத்தில் பொலிவை இழந்த தேர்... தேரோட்டம் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்குமா பிரம்மதேசம் கைலாசநாதர் ஆலயத்தில் பொலிவை இழந்த தேர்... தேரோட்டம் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்குமா

 மேகதாது அணை விவகாரம்

மேகதாது அணை விவகாரம்

இதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது:- மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜ.க மக்களை குழப்புகிறது. இங்குள்ள பா.ஜ.க மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்று கூறுகிறது.

 பா.ஜ.க குழப்பம்

பா.ஜ.க குழப்பம்

ஆனால் கர்நாடகா பா.ஜ.க மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பிடிவாதமாக உள்ளது. நாட்டில் அனைவரும் இயற்கை உணவுக்கு திரும்பி உள்ளார்கள் ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி பெருக்கம் இல்லை. நாங்கள் இயற்கை வேளாண்மையை கட்டமைக்கிறோம். பொருளாதார கொள்கையை பேசி வருகிறோம். வேளாண்மை அரசுப் பணியாக மாற்றுவோம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.

 உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல்

எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இதில் எந்த மாற்றமும் இல்லை. சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிக வாக்கு சதவீதம் பெற்று தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளோம்.

வாக்கு சதவீதம்

வாக்கு சதவீதம்

கடந்த காலங்களில் கட்சிகள் தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்கு சதவீதத்தை விட கூட்டணி வைத்த போது அவர்களுக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளதை நீங்களே பாருங்கள். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி வைத்ததால் அவர்களின் வாக்கு விழுக்காடு குறைந்து விட்டது. இவ்வாறு சீமான் கூறினார்.

 6.5 சதவிகித வாக்குகள்

6.5 சதவிகித வாக்குகள்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால் மற்ற கட்சிகள் வியந்து பார்க்கும் வகையில் 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளது. அதே வேளையில் கூட்டணி வைத்து களம் கண்ட அ.ம.மு.க- தே.தி.மு.க கட்சிகள், மக்கள் நீதி மய்யம்-சமத்துவ மக்கள் கட்சி-இந்திய ஜனநாயக் கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Seeman the party's co-ordinator of the naam tamilar katchi has said that the Tamil Party would stand alone in the local body elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X