சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அறிவே இல்லையா.. டயர்ட் ஆகிட்டோம்.. எங்களை குறை சொல்லாதீங்க..கொஞ்சம் ஒத்துழைப்பு தாங்க.. கதறிய நர்ஸ்

நர்ஸ் ஒருவரின் கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஜேஸ்மின் மினி என்ற நர்ஸ் ஒருவர், கொரோனா விழிப்புணர்வு குறித்து கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ பெரிதும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வாழ்வை வளமாக்கும் வைகாசி மாத சஷ்டி - ஆரோக்கியம் அதிகரிக்க விரதம் இருப்போம் வாழ்வை வளமாக்கும் வைகாசி மாத சஷ்டி - ஆரோக்கியம் அதிகரிக்க விரதம் இருப்போம்

அந்த வீடியோவில் அவர் பேசியது இதுதான்:

"நர்ஸ்கள் சரியாக நோயாளிகளை கவனிப்பதில்லை, ஆஸ்பத்திரிகளில் பெட் இல்லை, டாக்டர்கள் இல்லை, உங்க வீட்டுல யாராவது இருந்தால் இப்படித்தான் கண்டுக்காம இருப்பீங்களா? என்று நிறைய வீடியோக்களில் சொல்றீங்க.. என்னதான் நினச்சிட்டு இருக்கீங்க?

 அலட்சியம்

அலட்சியம்

நான் நேரடியாகவே உங்களுக்கு மண்டையில அறிவே இல்லையா? மாஸ்க் யாராவது போடறீங்களா? கையை கழுவறீங்களா? வீட்டில் இருக்க சொன்னாமே.. தெருவுலதானே சுத்திட்டு இருக்கீங்களே.. ரோட்டில் போய் கொஞ்சம் பாருங்க.. மீன் வாங்கி சாப்பிட்டே ஆகணுமா? காய்கறி கடையில கூட்டம், இறைச்சி கடையில கூட்டம்.. உங்களுக்கெல்லாம் திங்கறது மட்டும்தான் தெரியுமா? பிரிட்ஜ் இருக்குல்லே, எல்லாத்தையும் வாங்கி வெக்க வேண்டியதுதானே?

 உதவிகள்

உதவிகள்

நாங்க சொன்னது எதையும் நீங்க கேட்கல, உங்களுக்கு மட்டும் பெட் வந்துடணும், நர்ஸ் உதவிக்கு இருக்கணும்ன்னு நினைக்கறீங்களே.. நான் தெரியாமதான் கேட்கிறேன், டாக்டர்கள், நர்ஸ்கள் எல்லாம் தெய்வ பிறவிகளா? இவ்வளவு பேசறீங்களே, ஒரு நர்ஸ்சுக்கு பீரியட்ஸ் ஆச்சுன்னா, எப்படி பேட் மாத்துவாங்கன்னு யோசிச்சிங்களா?

டியூட்டி

டியூட்டி

7 மணிக்கு டியூட்டிக்கு ஒரு நர்ஸ் வந்தால், அவளோட டிரஸ், அதுக்குமேல ஆஸ்பத்திரி யூனிபார்ம், அதுக்கு மேல ஏப்ரான், அதுக்கு மேல கவுன், அதுக்கு மேல அவங்களோட கவச உடை, கையில் 5, 6 கிளவுஸ், மூக்கு மறைச்சிருப்பாங்க.. இப்படி இருக்கும் பேட் மாத்தறது பத்தி என்னைக்காவது யோசிச்சி பார்த்தீங்களா? ராத்திரி 7 மணி வரை அந்த நர்ஸ் சாப்பிடாமதான் இருப்பாங்க.. அந்த டிரஸ் எல்லாம் எடுத்துட்டு டியூட்டி முடியற வரைக்கும், சாப்பிடக்கூட முடியாது..

 மனசாட்சி

மனசாட்சி

உங்க குடும்பத்துல யாராவது நர்ஸா வேலை பார்த்தாதான் எங்க அருமை தெரியும்.. எத்தனை நர்ஸ்கள், எத்தனை லேப்-டெக்னிஷியன்கள் இறந்திருக்காங்க தெரியுமா? தயவுசெய்து வீட்டில் இருங்க.. மாஸ் போடுங்க.. வெளியே போவாதீங்க.. ஒருநாளைக்கு 10 சாவு பார்க்கிறோம்.. எங்களுக்கும் மனசாட்சி இருக்குமில்லை.. எங்களுக்கும் வலிக்கும் இல்லை.. அதுஏன் உங்களுக்கு புரியறது இல்லை.. தாங்க முடியல.. தயவுசெய்து யாரையும் குறை சொல்லாதீங்க.. கொஞ்சம் ஒத்துழைப்பு தாங்க..

 3வது அலை

3வது அலை

இப்படியே போனால் 3வது அலையில் நாம எதுவுமே பண்ண முடியாது.. அன்னைக்கு டாக்டர்களும், நர்ஸ்களும் இருக்க மாட்டாங்க.. அவங்களுக்கும் குடும்பம், குட்டி இருக்கு.. யாரும் வீட்டுக்கு கூட போறது இல்லை.. எல்லாரையும் ஒரே இடத்துல அங்கேதான் தங்கி இருக்கோம்.. படுக்கக்கூடிய இடம் இல்லாம இருக்கோம்..நீங்க நினைக்கிற மாதிரி 40 ஆயிரம் 50 ஆயிரம் சம்பளம் எல்லாம் நர்ஸ்ங்க வாங்கல.. நிறைய நர்ஸ்ங்க கான்ட்டிராக்ட் பேஸிக்ஸ்தான்..

 கதறி அழுகை

கதறி அழுகை

அரசாங்கத்தாலும் போதுமான சம்பளத்தாலும் தர முடியாத நிலை.. 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் நர்ஸ்ங்களும் உண்டு.. கல்யாணம், பிறந்தநாள் விழாக்களை கொஞ்ச நாளைக்கு கொண்டாட வேண்டாம்.. மனசளவிலும், உடலளவிலும் சோர்வடைஞ்சு போயிருக்கோம்.. எல்லாரும் தடுப்பூசி போடுங்க.. 3வது அலையில் இருந்து தப்பிக்கலாம்.. ப்ளீஸ் மனசாட்சின்னு இருந்தால், இருந்தால், இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க.. இல்லேன்னாலும் பரவாயில்லை.. வீட்டிலயே பத்திரமா இருங்க.." என்று கதறி அழுதுள்ளார்.

English summary
Nurse Jasmine Minis Corona Awareness Video viral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X