சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேனீர் விருந்துக்கு வராத எடப்பாடி.. யூஸ் செய்த ஓபிஎஸ்.. ஆளுநர் ரவியுடன் 25 நிமிடங்கள் சந்திப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் கலந்து கொண்ட ஓ பன்னீர் செல்வம் நேற்றைய தினம் 25 நிமிடங்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை தனியே சந்தித்து பேசியுள்ளார்.

நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அது போல் முதல்வர் ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

இந்த நிலையில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று. இதற்காக முதல்வர் ஸ்டாலின், அதிமுக, திமுக, தமாக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆளுநர் தேநீர் விருந்து! ஆதரவாளர்களுடன் ஆஜரான ஓபிஎஸ்.. மிஸ்ஸான எடப்பாடி! உற்று நோக்கும் அதிமுக தலைகள்ஆளுநர் தேநீர் விருந்து! ஆதரவாளர்களுடன் ஆஜரான ஓபிஎஸ்.. மிஸ்ஸான எடப்பாடி! உற்று நோக்கும் அதிமுக தலைகள்

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் தேனீர் விருந்தில் கலந்து கொண்டார். இந்த தேனீர் விருந்தில் ஓபிஎஸ் தரப்பு அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வருகை தந்தனர். ஆனால் இபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தேனீர் விருந்து தொடங்குவதற்கு முன்னர் 4.20 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். உடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

25 நிமிடங்கள்

25 நிமிடங்கள்

இந்த சந்திப்பு சுமார் 4.45 மணி வரை நீடித்தது. அதாவது 25 நிமிடங்கள் இவர்கள் பேசியுள்ளது தெரிகிறது. இது குறித்து ஓபிஎஸ் தரப்பு கூறும் போது இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறியுள்ளது. ஆனால் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் அதற்கு 25 நிமிடங்கள் தேவையில்லையே என்பதுதான் அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அதிமுக வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு பாதகமாக தீர்ப்பு வந்துவிட்டால் அவரது அரசியல் பயணம் அஸ்தனமாகிவிடும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

ஓபிஎஸ் சந்திப்பு

ஓபிஎஸ் சந்திப்பு

என்னதான் மேல்முறையீடு செய்தாலும் தமிழக அரசியலில் ஓபிஎஸ்ஸின் பயணம் கேள்விக்குறியாகிவிடும். ஏற்கெனவே அதிமுக பஞ்சாயத்தில் தலையிட வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்திக்க முயன்று அது முடியாமல் போகவே செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு சென்னை வந்த போது விமான நிலையத்தில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே ஓபிஎஸ் பிரதமருடன் பேசினார். ஆளுநர் என்பவர் பாஜகவின் முகமாகவே பார்க்கப்படுகிறார் என்ற விமர்சனம் உள்ளது.

ஏன் சந்திப்பு

ஏன் சந்திப்பு

ஏற்கெனவே ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த போது அவருடன் அரசியல் பேசியதாக தெரிவித்திருந்தார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் ஓபிஎஸ்ஸும் ஆளுநரை சந்தித்துள்ளது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. அதிமுக வழக்கு குறித்து ஆளுநருடன் விவாதித்திருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

English summary
EX CM O Paneerselvam meets TN governor R.N. Ravi in Raj bhavan. Their meeting stayed for 25 minutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X