தமிழ்நாட்டில் சிமெண்ட், செங்கல், ஜல்லி விலை விர்... அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்
ஒரு மூட்டை சிமெண்ட் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. எம் சாண்ட் ஒரு யூனிட் ரூ.6,000 ஆகவும் ஒரு அங்குல ஜல்லி 3,900 ரூபாயாகவும் முக்கால் அங்குல ஜல்லி 4,100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், கட்டுமான பொருட்களின் விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. எம் சாண்ட் ஒரு யூனிட் ரூ.6,000 ஆகவும் ஒரு அங்குல ஜல்லி 3,900 ரூபாயாகவும் முக்கால் அங்குல ஜல்லி 4,100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 30 முதல் 40 சதவிகிதம் வரை பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக கட்டுமான பொறியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒரு டன் கட்டுமான ஸ்டீல் கம்பி 68 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. செங்கல் ஒரு லோடு 18 ஆயிரம் ரூபாயிலிருந்து 24 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்படி அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் ஏற்றம் செய்யப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணிகள் தேக்கம் அடைந்துள்ளது.
இந்த விலை உயர்வினால் தமிழ்நாடு முழுவதும் கட்டுமானப் பணிகளைச் சார்ந்து வாழும் 20 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டுமான பொருட்கள் விலை திடீரென உயர்த்தப்பட்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கட்டுமான பொருள் பகுக்கப்பட்டு செயற்கை விலையேற்றம் உருவாகியிருப்பதாக மக்கள் நினைக்கின்றனர் என்றும் சிமெண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications