சசிகலா அதிமுகவில் மீண்டும் இணைப்பா? ஓபிஎஸ் பதிலால் பரபரப்பு!
சென்னை: அதிமுகவின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ள கருத்து, சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் பேச்சு
இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட அசாதாரணமான சூழலில், நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும், அது நடக்காது என்று தெரிவித்தார்.

சசிகலா இணைப்பா?
தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் இணைத்துக்கொள்ளப்படுவாரா என்று செய்தியாளர்களை கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதிமுகவின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இங்கே அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்று இல்லை, இது அதிமுக. அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு என்று தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கும்?
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின், ஓபிஎஸ் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான சையது கான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தார். அதேபோல் சசிகலாவுடன் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் சசிகலா குறித்து கேள்விக்கு ஓபிஎஸ் அளித்துள்ள பதில், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன்மூலம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அமமுக - அதிமுகவை பாஜக இணைக்க முயற்சித்ததாக டிடிவி தினகரன் கூறி இருந்தார். இதனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவின் அனைத்து அணிகளையும் இணைக்க பல்வேறு முயற்சிகள் டெல்லி மேலிடம் சார்பாக நடக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பழைய கணக்கு
ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அமமுக - அதிமுகவை இணைக்க பாஜக முயற்சித்ததாக டிடிவி தினகரன் கூறி இருந்தார். இதனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவின் அனைத்து அணிகளையும் இணைக்க பல்வேறு முயற்சிகள் டெல்லி மேலிடம் சார்பாக நடக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications