சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று 3-வது முறையாக நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி, கொறடா பதவி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. கொறடா பதவி கேட்பாரா ஓபிஎஸ்.. பரபரப்பு சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. கொறடா பதவி கேட்பாரா ஓபிஎஸ்.. பரபரப்பு

யார் யார் பங்கேற்பு?

யார் யார் பங்கேற்பு?

இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி, கொறடா பதவி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஓபிஎஸ் அதிருப்தி

ஓபிஎஸ் அதிருப்தி

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கொண்டு தமக்கு தராததால் ஓ. பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருந்தார். இன்றைய கூட்டத்தில் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இழுபறி தொடர்ந்தது.

ஓபிஎஸ் ஒப்புதல் என தகவல்

ஓபிஎஸ் ஒப்புதல் என தகவல்

பின்னர் ஒருவழியாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்க ஓ. பன்னீர்செல்வம் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அதிமுக இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொறடாவாக எஸ்பி வேலுமணி

கொறடாவாக எஸ்பி வேலுமணி

மேலும் அதிமுகவின் சட்டசபை கொறடாவாக எஸ்.பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை கொறடாவாக அரக்கோணம் சு. ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக கே.பி. அன்பழகன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஓபிஎஸ் அணி மனோஜ் பாண்டியன்

ஓபிஎஸ் அணி மனோஜ் பாண்டியன்

அதிமுகவின் சட்டசபை துணை செயலாளர் பதவி ஓபிஎஸ் அணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியனுக்கு இந்த துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் கையெழுத்திட்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

English summary
Sources said that O Panneerselvam accept the deputy leader of opposition in Tamilandu Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X