“தாய் வழி வந்த தங்கங்கள்” ஓஹோ.. எடப்பாடிக்கு சிக்னல்.. விடாமல் தூது விட்டு பார்க்கும் ஓபிஎஸ் தரப்பு!
சென்னை : அதிமுகவில் நிலவி வரும் மோதல் சூழலில், எடப்பாடி கை ஓங்கியிருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பல வடிவங்களில் தூது விட்டு வருகின்றனர்.
Recommended Video
உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். அதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார்.
இந்நிலையில், திருச்சியில் ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர் சார்பில் இரட்டைத் தலைமையை வலியுறுத்தி இரட்டை இலைச் சின்னத்தோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பரபர அதிமுக
பரபரப்பான அரசியல் சூழலில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களையும் முக்கிய நிர்வாகிகளையும் கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது ஜூலை 11ஆம் தேதி பொதுக்கழுவை கூட்டி பொதுச் செயலாளர் ஆகிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதேநேரத்தில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவை தடுக்கவும், இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்பதற்காகவும் ஓபிஎஸ் பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்.

சின்னம்
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் தேர்தல் நடைபெற உள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலால், உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினருக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

இரட்டை இலை
கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்தக் கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அதிமுகவில் நிலவி வரும் மோதலால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்த நிலையில் இந்தப் படிவங்களில் யார் கையெழுத்து போடுவார்கள் என்ற சிக்கல் எழுந்துள்ளது. இந்த படிவங்களை இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பித்தால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

ஓபிஎஸ் கடிதம்
சின்னம் வேண்டும் என அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினரையும் வலியுறுத்தி வந்த நிலையில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார் என்றும் நீங்கள் தயாராக இருந்தால் அதில் கையெழுத்திட்டு உடனே அனுப்புமாறும் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

நிராகரித்த எடப்பாடி
இன்று மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட்டால் இரட்டை இலை சின்னம் அதிமுக வேட்பாளர்களுக்கு கிடைக்கும். உள்ளாட்சி இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தை மகாலிங்கம் மூலம் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு கொடுத்து அனுப்பினர். ஆனால், ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி வாங்க மறுத்துள்ளார். இதனையடுத்து அந்தக் கடிதம் மீண்டும் ஓபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தூது
தனக்கு ஆதரவு பலம் இல்லாததால், இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்று முயன்று வரும் ஓபிஎஸ், இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முயன்றார். அதிமுகவினருக்கு இரட்டை இலை சின்னம் வழங்குவதை சாக்காக வைத்து தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை செல்லும் என தெளிவுபடுத்த முயன்றார் ஓபிஎஸ். அதை உணர்ந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸின் கடிதத்தை கையிலேயே வாங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். இதன்மூலம், ஓபிஎஸ்ஸின் தூது முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இரட்டைத் தலைமை
ஒபிஎஸ் நேரடியாக இரட்டைத் தலைமை வேண்டி தூது விடுவது ஒருபக்கம் என்றால், அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் மூலம் இரட்டைத் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். ஈபிஸ் தரப்பினர் ஓபிஎஸ் படங்கள், பெயர்களை புறக்கணித்து வருகின்றனர். இரு தரப்பினரும் பிரிந்து மோதிக் கொள்ளும் நிலையிலும், ஓபிஎஸ் ஆதரவாளர்களான முக்கிய தலைவர்கள் தொடர்ந்து இரட்டைத் தலைமையே வேண்டும் என்றுதான் கூறி வருகின்றனர். அதுவே கட்சிக்கு நல்லது என்றும் கூறி வருகின்றனர்.

போஸ்டர்
இந்நிலையில், இரட்டை இலையில் ஒரு இலையில் ஓ.பன்னீர்செல்வம் படத்தையும், ஒரு இலையில் எடப்பாடி பழனிசாமி படத்தையும் போட்டு, திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் போஸ்டர் ஒட்டியுள்ளார். திருச்சி மாநகரப் பகுதியில் நடராஜன், அவரது மகன் ஜவஹர்லால் நேரு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் இரட்டை இலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் படங்களோடு 'தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இறங்கி வருவாரா?
அதிமுகவில் நிலவி வரும் குழப்பமான சூழலுக்கு மத்தியில் இரண்டு தரப்பினரும், தேர்தல், ஆணையம், நீதிமன்றம் என மாறி மாறி கதவுகளை தட்டி வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் இறங்கிச் சென்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தூது விட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமி இறங்கி வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications