இனி அது தான் சரியாக இருக்கும்! ஓபிஎஸ் போடும் மனக் கணக்கு? பிளானை சமாளிப்பாரா எடப்பாடி பழனிசாமி?
சென்னை : அதிமுக பொதுக்குழுவில் அவமானம், உயர் நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு, தேவர் தங்க கவச விவகாரத்திலும் சிக்கல் என அதிமுகவில் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காக பழைய திட்டத்தையே மீண்டும் புதுப்பிக்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முன்னாள் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணை அறிக்கை வெளியானதில் இருந்தே அதிமுக தொடர்பான விவகாரங்கள் அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு விவாதத்தையும் உருவாக்கி இருக்கிறது.

ஆறுமுகசாமி ஆணையம்
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பின் பல்வேறு அதிர்ச்சி தரும் விவகாரங்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக ஜெயலலிதாவை ரத்த வெள்ளத்தில் பார்த்ததாக முன்னாள் தலைமை செயலாளரான ராம மோகன் ராவ் கூறி இருப்பது அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அப்போது முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம் என்ன செய்து கொண்டிருந்தார் என எடப்பாடி தரப்பினர் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம்
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சராக தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொண்டர்கள் ஒரு பக்கம், சசிகலா ஒரு பக்கம், எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் என இருவருமே தனித்தனி பக்கம் என பலமுனை தாக்குதல்களை மாறி மாறி ஏவி வருகின்றனர். இடையில் சேர்ந்து கொண்ட டிடிவி தினகரன் தன் பங்கிற்கு அறிக்கை பேட்டி என குடைச்சலை கொடுத்து வருகிறார். உண்மையில் ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன சசிகலாவின் பங்கு? ஓபிஎஸ் என்ன செய்தார்? எடப்பாடி எங்கிருந்தார்? என்பன குறித்த பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அறிக்கையும் சரி அதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளும் சோதனைவாகவே அமைந்திருக்கிறது.

அடுத்தடுத்து பின்னடைவு
மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஒற்றை தலைமை முழக்கம் எழுந்தது. பொதுக்குழு கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டது, உயர் நீதிமன்ற ஒற்றை தலைமை நீதிபதி தீர்ப்பு சாதகமாக அமைந்தாலும் இரு நீதிபதிகள் அமர்வு கொடுத்த தீர்ப்பு வரும் பின்னடைவாக கருதப்பட்டது. இடையே சில ஒன்றிய செயலாளர் எம்எல்ஏ வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தாலும் தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்கின்றனர் அதிமுகவினர்.

புதிதாகும் பழைய திட்டம்
இந்த நிலையில் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் மாவட்டம் தோறும் ஆலோசனை மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் உள்ளிட்ட சிலரின் ஆதரவையாவது பெற்றுவிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக ஏற்கனவே ஆதரவாளர்களும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதனுடைய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தால் சசிகலாவும் மிகப் பெரிய அளவிலான மன உளைச்சலில் இருக்கிறாரா இதனால் பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதும் தாமதப்பட்டுவரும் நிலையில் ஓபிஎஸ் சசிகலா சந்திப்புக்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications