அண்ணே போகாதீங்க.. ‘எமகண்டம்’ முடியல! அலர்ட் செய்த ரத்தத்தின் ரத்தம்! ரிவர்ஸ் கியர் போட்ட ஓபிஎஸ்!
சென்னை : சென்னை வந்துள்ள பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை சந்திக்க இரண்டரை மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் எமகண்டம் இன்னும் முடியவில்லை எனக் கூறியதால் சிறிது நேரம் காத்திருந்து விட்டு பின்னர் மீண்டும் புறப்பட்டார்.
Recommended Video
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு முன்மொழியப்பட்டுள்ளார்.
இதை எடுத்து பல்வேறு மாநிலங்களிலும் நேரடியாக சென்று பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

சென்னையில் திரெளபதி முர்மு
இதற்காக இன்று சென்னை வந்த அவர் காலையில் புதுச்சேரி சென்று முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் பின்னர் சென்னை திரும்பிய அவர் இன்று சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார்.

முற்றிய மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி இடையிலான மோதல் முற்றியுள்ளது. இதனிடையே திரௌபதி வரவேற்க இருவரும் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்தனர். ஆனால் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் தனித்தனி அறைகளில் தங்கி இருந்தனர்.

நேரில் சந்திக்கவில்லை
அதிமுக பொது குழுவுக்கு பிறகு இருவரும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை இருவரும் இணைந்து வரவேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவியது ஆனால் இருவரும் தனித்தனியே அவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

எமகண்டத்தால் தாமதம்
முன்னதாக பாஜக ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்க 2.50 மணிக்கு புறப்பட தயாராக தனது வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது, இன்று எமகண்டம் 3 மணி வரை இருப்பதாக உடனிருந்தவர்கள் கூறியதால் திரும்பி வீட்டிற்குள்ளேயே சென்று விட்டார். பின்னர் இன்றைய நாளுக்கான எமகண்ட நேரம் 3 மணிக்கு முடிந்ததை தொடர்ந்து சரியாக 3. 00 மணிக்கு தனது காரில் புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் முன் ஓபிஎஸ் வீட்டில் முன் கோ பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications