அழாதே பன்னீர்! சென்னை போய் நான் சொன்னதை செய்.. அன்று ஜெயலலிதா சொன்னது என்ன? ஓபிஎஸ் பரபர வாக்குமூலம்
சென்னை: ஜெயலலிதா மரண விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முக்கியமான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். ஜெயலலிதாவிற்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது பற்றி ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video
மறைநத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பல பரபரப்பு வாக்குமூலங்களை அளித்து உள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக 6 மணி நேரத்திற்கும் மேலாக ஓ பன்னீர்செல்வம் பல்வேறு விஷயங்களை வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார். அதில், ஜெயலலிதாவின் கைரேகை. திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலில் ஜெயலலிதா கைரேகை போட்டது உண்மைதான்.
ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகமில்லை: ஓபிஎஸ் பல்டி! சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை என வாக்குமூலம்.

ஜெயலலிதா
மேலும் ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவி நீக்கப்பட்ட முன்பாக, டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைவிற்கு முன்பாக அவரை பார்த்ததாக ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் சந்தேகம் அடையவில்லை. பொதுமக்களிடயே கருத்து வலுத்ததால்
மட்டுமே நான் அதை பற்றி விசாரிக்க கோரிக்கை விடுத்தேன். அரசுப்பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எவ்வித தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

சசிகலா
சசிகலாவை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன். சசிகலா எந்தவிதமான சதித் திட்டமும் தீட்டவில்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இந்த நிலையில் இரண்டு நாள் விசாரணை சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்தது. ஆணையத்தின் 120 கேள்விகளுக்கு பதில் அளித்தார் . சசிகலா தரப்பு வழக்கறிஞர் எழுப்பிய 34 கேள்விகளுக்கும் அப்போலோ தரப்பு வழக்கறிஞரின் 11 கேள்விகளுக்கும் ஓ பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

ஓ பன்னீர்செல்வம்
இந்த விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் சொத்து குவிப்பு வழக்கு பற்றியும்முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று கர்நாடக நீதிமன்றம் கூறியதும் நான் வருத்தத்தில், துயரத்துடன் கண்ணீர்விட்டு கொண்டு இருந்தேன். மிகுந்த தூரத்தில் நான் இருந்தேன். அப்போது என்னை அழைத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட சொன்னார் ஜெயலலிதா. அவர் சொன்னபடியே நான் எம்எல்ஏக்களை உடனே வரும்படி அழைத்தேன்.

அதிமுக வாக்குமூலம்
சென்னையில் கூட்டம் நடைபெற்றது. தனது பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனை அழைத்து தனியாக ஜெயலலிதா பேசினார். அதில், ஓ.பன்னீர்செல்வம் தான் அடுத்த முதல்வர். அவரின் பெயரத்தான் முன்மொழிய வேண்டும் என்று கூறிவிட்டார். அவரைதான் எம்எல்ஏக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார். நான் தீர்ப்பு வந்த சோகத்தில் மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்தேன்;

ஜெயலலிதா என்ன சொன்னார்
அப்போது ஜெயலலிதா என்னை சந்திக்க அழைத்தார். நான் அவரை சென்று சந்தித்தேன். அவர் என்னிடம் அழாதே பன்னீர் என்று கூறினார். மேலும் இப்போதுதான் நீ தைரியமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். சென்னைக்கு உடனே கிளம்பி செல். சென்னைக்கு சென்று நான் சொன்னபடி வேலைகளை செய் என்று கூறினார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications