12+12.. வேலையை காட்டும் ‘சோசியல் என்ஜினியரிங்’.. ஓபிஎஸ் பாசறை ‘ஓஹோ’! எடப்பாடிக்கு குடைச்சல்! போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தின் 'சோசியல் என்ஜினியரிங்'பிளான் வேலையைக் காட்டத் தொடங்கியிருப்பதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் பரபரத்து வருகின்றன.

அதிமுகவில் தனது ஆதரவாளர்களை நிர்வாகிகளாக நியமிக்கும் ஆக்‌ஷனை தீவிரப்படுத்தியுள்ளார் ஓபிஎஸ். சாதி + பெரும்பான்மை + செல்வாக்கு என கணக்கிட்டு மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்து வருவது அவரது தரப்பை பலப்படுத்தி வருகிறது.

புதிய நிர்வாகிகளை நியமித்த மாவட்டங்களில், எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து முக்கிய புள்ளிகளை ஓபிஎஸ் டீம் உருவி வருகிறது. ஓபிஎஸ் தங்கள் பக்கம் இழுக்கும் ஆட்களை ஈபிஎஸ் கட்சியை விட்டு நீக்கி வருகிறார்.

கடந்த சில நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எடப்பாடிக்கு கிடைக்கும் தகவல்கள் அவருக்கு ஷாக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 எடப்பாடி - பன்னீர் யுத்தம்

எடப்பாடி - பன்னீர் யுத்தம்

தற்போதைய நிலையில் அதிமுக, ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என ரெண்டுபட்டுக் கிடக்கிறது. அதிமுக அதிகார யுத்தத்தில் இன்றைய தேதியில் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமி பலம் பெற்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். அதேநேரம் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் அடுத்த மாதம் தான் விசாரணைக்கு வர இருக்கிறது. இதனால், உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இறுதியாக என்ன முடிவெடுக்கப் போகி்ன்றன என்பதை இரு தரப்பினர் மட்டுமல்லாமல், அரசியல் பார்வையாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

 புதிய மா.செக்கள்

புதிய மா.செக்கள்

இந்நிலையில், மாவட்ட செயலாளர்களையும், முக்கிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக கள நிலவரத்தை விசாரித்து, பதவி கேட்பவர்களை நேரில் அழைத்துப் பேசி மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார் ஓபிஎஸ். அதன் காரணமாகவே நிர்வாகிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அதிமுகவில் நிர்வாக ரீதியாக இருக்கும் மாவட்டங்களை புதிதாக பிரித்து பதவிகளை அறிவித்து வருகிறார் ஓபிஎஸ்.

2 தொகுதி - 1 மா.செ

2 தொகுதி - 1 மா.செ

2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்கிற கணக்கில் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார் ஓபிஎஸ். திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை மூன்றாகப் பிரித்தும், கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களை இரண்டாகப் பிரித்தும், கள்ளக்குறிச்சியை இரண்டாகப் பிரித்தும் அதிரடியாக மாவட்ட நிர்வாகிகளை நியமித்துள்ளார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தை ஐந்தாகப் பிரித்து அதிரடி காட்டியிருக்கிறார் ஓபிஎஸ்.

சோசியல் என்ஜினியரிங்

சோசியல் என்ஜினியரிங்

ஓபிஎஸ்ஸின் இந்த மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில், பயங்கரமான கிரவுண்ட் வொர்க் நடத்தி 'சோசியல் என்ஜினியரிங்' வேலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. உதாரணமாக ஒரு மாவட்டத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பெரிய வாக்கு வங்கியாக இருக்கிறார்கள் என்றால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாவட்ட செயலாளராக எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் இருக்கிறாரோ, அதை விட்டு இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஓபிஎஸ் மாவட்ட செயலாளர் பதவியைத் தருகிறாராம்.

நைஸ் கணக்கு + நோ அதிருப்தி

நைஸ் கணக்கு + நோ அதிருப்தி

இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கும் அந்த சாதியைச் சேர்ந்த நிர்வாகிகளை அப்படியே நைஸாக நம் பக்கம் திருப்பி விடலாம் எனக் கணக்குப் போட்டிருக்கிறாராம் ஓபிஎஸ். மேலும், மாவட்டங்களைப் பிரித்து ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி என்கிற ரீதியிலும் நியமனங்கள் நடந்திருக்கின்றன. கழக மாவட்டங்களை அதிகப்படுத்தி இருப்பதன் மூலம், தனது பக்கம் இருக்கும் நிர்வாகிகளின் அதிருப்தியையும் மட்டுப்படுத்தி இருக்கிறார் ஓபிஎஸ்.

பிளஸ் பலன்கள்

பிளஸ் பலன்கள்

ஓபிஎஸ்ஸின் இந்தக் கணக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்ற அலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸின் இந்த கணக்கு நல்ல ரிசல்ட்டை கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர். ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் பலர் ஓபிஎஸ் பக்கம் வர சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.

கொங்கு மண்டலத்திலும்

கொங்கு மண்டலத்திலும்

கொங்கு மண்டலத்தில் பவர் காட்டி வரும் ஈபிஎஸ் தரப்பினருக்கு, ஓபிஎஸ்ஸின் இந்த நடவடிக்கையால் பெரிய குடைச்சல் ஏற்பட்டுள்ளதாம். கொங்கு மண்டல மாவட்டங்களில் ஓபிஎஸ் நியமித்துள்ள மாவட்ட செயலாளர்கள், எடப்பாடி அணியில் இருந்து ஆட்களைத் தூக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியிருப்பதால், அப்பகுதிகளைச் சேர்ந்த ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் அவசர அவசரமாக கட்சிக் கூட்டங்களை நடத்தி ஓபிஎஸ் அணிக்குச் சென்றவர்கள் எதிர்காலம் அவ்வளவுதான் என பயமுறுத்தி வருகின்றனராம்.

12 + 12

12 + 12

இந்நிலையில் தான், மேலும் பலரும் ஓபிஎஸ் அணியில் இணையும் முடிவை எடுத்துள்ளனர். அவர்களை எல்லாம் ஈபிஎஸ் மொத்தமாக கட்சியை விட்டு நீக்கி வருகிறார். கொங்கு மண்டலம் உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் எடப்பாடி பழனிசாமிக்கு செல்லும் தகவல்கள் அவரை அப்செட்டில் ஆழ்த்தி இருக்கிறதாம். நேற்று கூட முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட 12 முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கினார் ஈபிஎஸ். இந்நிலையில் இன்று வேலூர், திருச்சி, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 12 நிர்வாகிகளை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

5 மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்

5 மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்

ஓபிஎஸ் தரப்போடு இணக்கமாக செயல்பட்டதால் கட்சியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேலூர் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் சி.கே.எம். நித்தியானந்தம். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரா.அழகேசன், ஈரோடு மாநகர் மாவட்டத்தை சேர்ந்த கோவை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணை செயலாளர் எம்.ரமணி காந்த், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் ஆர்.கே.ஜி (எ) கார்த்திக் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

வரிசைகட்டி வெளியேற்றும் எடப்பாடி

வரிசைகட்டி வெளியேற்றும் எடப்பாடி

மேலும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.செல்வராஜ், வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இ.அழகானந்தம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் ஆர்.ராமமூர்த்தி, மேலூர் நகர செயலாளர் எஸ்.ஏ.ஏ. பாஸ்கரன், மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணை செயலாளர் ஜி.கருப்பணன், திருப்பரங்குன்றம் மேற்கு பகுதி அவைத் தலைவர் கவிஞர் பா.சேகர், திருப்பரங்குன்றம் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.லெட்சுமிபதி ராஜன், திருப்பரங்குன்றம் பகுதி முன்னாள் துணைச்செயலாளர் பாலமுருகன் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஷாக்

ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஷாக்

தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக, அதுவும் குறிப்பாக ஓபிஎஸ், மாவட்ட நிர்வாகிகளை அறிவிக்கத் தொடங்கிய பிறகு, ஈபிஎஸ் அணியில் இருந்து ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் என பலரும் ஓபிஎஸ் பக்கம் தாவி வருவது ஈபிஎஸ் தரப்பை நிலைகுலைய வைத்துள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட செயலாளர்களிடம் ஈபிஎஸ் விசாரித்து வருகிறாராம். ஓபிஎஸ்ஸின் இந்த 'சோசியல் என்ஜினியரிங்' பிளானை முறியடிக்க நாமும் அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈபிஎஸ் அணியினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+