Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘10 லட்சம்’.. யார் யாருக்கு? எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் ‘மெகா’ பிளான்.. பரபர மூவ் - என்ன நடக்குது!?

Subscribe to Oneindia Tamil

சென்னை : எடப்பாடி பழனிசாமி தரப்பினர், 2,532 பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாண பத்திரம் பெற்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 10 லட்சம் தொண்டர்களிடம் கையெழுத்து பெறும் திட்டத்தில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் தனது இடத்தை தக்கவைக்க ஓ.பன்னீர்செல்வமும், கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர எடப்பாடி பழனிசாமியும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஆலோசித்து வரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் அடுத்தடுத்து கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர்.

அதிமுக = ஓபிஎஸ் + ஈபிஎஸ்

அதிமுக = ஓபிஎஸ் + ஈபிஎஸ்

அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி செய்த மேல்முறையீட்டில், பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வந்ததால் மீண்டும் அதிமுகவில் ஈபிஎஸ் செல்வாக்கு அதிகரித்தது. அதே நேரத்தில் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈபிஎஸ் அதிரடி ஆக்‌ஷன்

ஈபிஎஸ் அதிரடி ஆக்‌ஷன்

இதற்கிடையே, இரு தரப்பினருமே கட்சிக்குள் தங்களது தரப்பை வலுப்படுத்தும் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. விரைவில் தேர்தலை அறிவித்து நிரந்தர பொதுச் செயலாளர் ஆகத் திட்டமிட்டுள்ளார் ஈபிஎஸ். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளது ஈபிஎஸ் டீம்.

ஒரு கையெழுத்து - 3 பிளான்

ஒரு கையெழுத்து - 3 பிளான்

2,532 பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரமாண பத்திரம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரமாண பத்திரங்களின் நகல்களை தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர் சிவி சண்முகம் சமீபத்தில் தாக்கல் செய்தார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் நடக்க இருக்கும் விசாரணையின்போதும் இந்த பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த உறுதிமொழிக் கடிதங்களை வைத்தே பொதுச் செயலாளர் தேர்வு அறிவிப்பையும் வெளியிட ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் போடும் திட்டம்

ஓபிஎஸ் போடும் திட்டம்

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் வேறொரு வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடர வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளருக்கே கட்சியில் உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்றும் அதிமுக தொண்டர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் திட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு இறங்கியுள்ளதாம்.

10 லட்சம் தொண்டர்களிடம்

10 லட்சம் தொண்டர்களிடம்

முதற்கட்டமாக சுமார் 10 லட்சம் தொண்டர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று அதனை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க ஓபிஎஸ் டீம் திட்டமிட்டுள்ளதாம். தொண்டர்கள் தான் அதிமுக தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உட்கட்சி சட்ட விதி. எனவே, தலைமைப் பதவி விவகாரத்தில் பொதுக்குழுவை விட அதிகாரமிக்கது கட்சியின் தொண்டர்கள் தான். அதனால், தொண்டர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெறும் வேலையில் ஈடுபட இருக்கிறார்களாம்.

ஒருங்கிணைப்பாளர் மட்டும்தான்

ஒருங்கிணைப்பாளர் மட்டும்தான்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து பொதுக்குழுவில் திருத்தம் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி, உடனே இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணையத்திலும் ஆவணங்களைச் சமர்ப்பித்து விட்டார். எனவே இப்போது ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே இருப்பதைச் சுட்டிக்காட்டி வருகிறது ஓபிஎஸ் டீம். இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லாது என தீர்ப்பு வந்தால், ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் இழக்க நேரிடும்.

பொறுப்பு யாரிடம்?

பொறுப்பு யாரிடம்?

உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணைய முடிவுகளைப் பொறுத்தே ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் தெரியவரும். இந்த நிலையில் தான், ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடர வேண்டும் என்ற உறுதிமொழி பத்திரத்தில் 10 லட்சம் தொண்டர்களிடம் கையெழுத்து பெறும் அசைன்மெண்ட்டை தொடங்கவிருக்கிறது ஓபிஎஸ் டீம். இதற்கான பொறுப்புகளை பிரித்துக் கொடுப்பது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு சென்னையில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+