சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீர்ப்பு வந்ததுமே ஒரே குஷி.. “வண்டியை எடுங்க..” - சிரித்த முகத்தோடு ஜெ.நினைவிடம் கிளம்பும் ஓபிஎஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்திருப்பதையடுத்து ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்த இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு செய்தியாளர்களைச் சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ்

    ஜூலை 11-ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

    பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று என்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தீர்ப்பு வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் வெளியேயும், ஓபிஎஸ் இல்லத்தின் முன்பும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது- ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலை நீடிக்கும்-ஹைகோர்ட் அதிரடி ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது- ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலை நீடிக்கும்-ஹைகோர்ட் அதிரடி

    அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு

    அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு

    ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

    பரபரப்பு தீர்ப்பு

    பரபரப்பு தீர்ப்பு

    அதன்படி, கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்றாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

     ஓபிஎஸ் டீம் ஒரே குஷி

    ஓபிஎஸ் டீம் ஒரே குஷி

    அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீர்பளித்துள்ளதை அடுத்து, ஐகோர்ட் முன்பாக திரண்டிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பாக திரண்ட அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அடுத்து என்ன?

    அடுத்து என்ன?

    தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தனது ஆதரவாளர்களை தனது வீட்டில் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு மூத்த நிர்வாகிகள் பலரும் இனிப்பு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்துள்ளதால், சிரித்த முகத்தோடு காணப்படுகிறார் ஓபிஎஸ். இதனால், அவரது ஆதரவாளர்களும் உற்சாகமாகியுள்ளனர்.

    ஜெ.நினைவிடத்திற்கு

    ஜெ.நினைவிடத்திற்கு

    இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்திருப்பதால், ஜெ.நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்த இருக்கிறார் ஓபிஎஸ். இதனால், ஓபிஎஸ் ஆதரவாளர்களான அதிமுக தொண்டர்களும், ஜெ.நினைவிடத்திற்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

    English summary
    While the Chennai High Court has ordered in favor of OPS, O.Panneerselvam is going to visit late former chief minister Jayalalithaa memorial.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X