சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடல் பருமன் பிரச்சினை.. தென் மாநிலப் பெண்களிடம்தான் அதிகம்.. தமிழகம்தான் டாப்.. எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: தென் மாநிலப் பெண்களிடம், குறிப்பாக தமிழக பெண்களிடம் உடல் பருமன் பிரச்சினை அதிகமாக இருப்பது தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் மக்கள் பல்வேறு புதிய புதிய நோய்களுக்கு ஆளாகின்றனர். கடந்த காலங்களை ஒப்பிடுகையில், தற்போது மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவது பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல, இதய நோய்களும் அதிகரித்துள்ளது. ஒருகாலத்தில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்பட்ட இதயம் சம்பந்தமான நோய்கள் இப்போது இளம் தலைமுறையினரிடம் அதிகம் பார்க்க முடிகிறது. 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மாரடைப்பில் மரணம் அடைவதும் மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது.

ஓஹோ.. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் 8 சிறுத்தைகள்.. 1000 உள்ளூர் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி ஓஹோ.. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் 8 சிறுத்தைகள்.. 1000 உள்ளூர் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

ஆபத்தை விளைவிக்கும் உடல் பருமன்

ஆபத்தை விளைவிக்கும் உடல் பருமன்

இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடல் பருமன் தான் என்கின்றனர் மருத்துவர்கள். உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது, சிகரெட், மதுப் பழக்கம் போன்றவையே உடல் பருமனுக்கு முதன்மையான காரணிகள் ஆகும். அதுபோல வாழ்க்கை முறையில் (லைஃப் ஸ்டைல்) ஏற்படும் மாற்றங்களும் உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.

தென்மாநிலப் பெண்களிடம் அதிகம்

தென்மாநிலப் பெண்களிடம் அதிகம்

இந்நிலையில், உடல் பருமன் தொடர்பாக தென் மாநிலங்களில் அண்மையில் சர்வே எடுக்கப்பட்டது. இதற்காக தென் மாநிலங்களில் உள்ள 120 மாவட்டங்களைச் சேர்ந்த 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கிடைத்திருக்கும் புள்ளிவிவரங்கள்தான் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கின்றன.

அதாவது தென் மாநிலங்களில் ஆண், பெண் என இரு பாலரிடமும் உடல் பருமன் பிரச்சினை அதிகமாக உள்ளது. அதிலும், தென் மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள், அதிக அளவில் உடல் பருமனுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 நகர்புறப் பெண்கள்

நகர்புறப் பெண்கள்

கர்நாடகா, தெலங்கானாவில் பெண்களிடம் உடல் பருமன் பிரச்சினை ஓரளவுக்கு குறைவாக உள்ளது. அதே சமயத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெண்களிடம் உடல் பருமன் பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது. தேசிய அளவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகம் உடல் பருமனாக இருக்கிறார்கள். அதேபோல, கிராமப்புறங்களை சேர்ந்த பெண்களை விட நகர்ப்புறப் பெண்கள் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம்தான் டாப்

தமிழகம்தான் டாப்

அதேபோல, ஓராண்டுக்கு முன்பு பெண்களிடம் எடுக்கப்பட்ட உடல் பருமன் ஆய்வையும், தற்போது எடுக்கப்பட்ட ஆய்வையும் ஒப்பிட்டு பார்த்தால், 3.3 சதவீதம் உடல் பருமன் விகிதம் அதிகரித்துள்ளது. இதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு உடல் பருமன் பிரச்சினை 9.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக கர்நாடகா (6.9%), கேரளா (5.7%), தெலங்கானா (2%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

English summary
According to a National Survey, Obesity is highly seen in South Indian Women. In particular Tamilnadu women placed in the top.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X