பரவும் ஓமிக்ரான்.. மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்க.. பிரதமர் மோடி வேண்டுகோள்
உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதிக கொரோனா பதிவு, போதிய சுகாதார கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஓமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் 350க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக பரவி வரும் ஓமிக்ரான் திரிபு, கொரோனா பாதிப்பு மற்றும் சுகாதார கட்டமைப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகள், கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி சிறப்பு நிபுணர் குழுவினர் பங்கேற்றனர். ஆய்வுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வுடன் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

ராஜேஷ் பூஷன்
இதில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகள், கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி சிறப்பு நிபுணர் குழுவினர் பங்கேற்றனர். ஆய்வுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வுடன் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

ஒட்டுமொத்த அரசு
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, அதனை கையாள்வது குறித்து மாநில அரசின் முயற்சிகளுக்கு, மத்திய அரசு மிகவும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த அரசு என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மருத்துவ கட்டமைப்பு
அதிகளவு மரபணு பரிசோதனைக்காக, மாதிரிகளை உரிய முறையில் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறிய மோடி, குறைவான தடுப்பூசி, அதிக கொரோனா பதிவு மற்றும் போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்தியக்குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video

முன்னெச்சரிக்கை
தகுதி வாய்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications