வண்ண வண்ண பூக்கள்.. காணும் இடமெல்லாம் அத்தப்பூ கோலம்.. இன்று ஓணம் பண்டிகை.. கேரள மக்கள் கொண்டாட்டம்
சென்னை: இன்று ஓணம் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.. ஓணம் பண்டிகை என்பதால் கேரள மக்கள் மகிழ்ச்சியுடன் திருநாள் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்தும், சிறப்பித்தும், வருகிறார்கள்.
தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கொண்டாடப்படுவது போலவே, கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
10 நாட்களும் கொண்டாட்டம்: இந்த 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.. அந்தவகையில், இன்றைய தினம் ஓணம் பண்டிகை கோலாகலமாக கேரளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பண்டைய காலத்தில் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னனின் நினைவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.. திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு உள்பட முக்கிய நகரங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன...
காய்கறிகள்: கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே, பூக்கோலம் போடுவதற்கு பூக்களை வாங்குவதற்கும், ஓணம் சத்யா என்று அழைக்கப்படும் விருந்து படைக்க காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்குவதற்கும், குடும்பம் குடும்பமாக மக்கள் பாலக்காடு நகரில் ஒன்று திரண்டுவிட்டனர்.
இதனால், காலையிலேயே பாலக்காடின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது.. குறிப்பாக, பெரிய கடை வீதி, டவுன் பஸ் ஸ்டாண்ட் சாலை, கோர்ட் ரோடு, கல்லுாரி சாலை, ஜிபி ரோடு, ஸ்டேடியம், பஸ் ஸ்டாண்ட் பகுதி போன்ற இடங்களில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.. இதனால், போலீசார் இந்த டிராபிக்கை சீர்படுத்துவதற்குள் திணறிவிட்டனர்..
பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரி மலை கோயிலில் நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.. சபரி மலையில் நேற்று முதல் திருவோண நட்சத்திரத்திற்கான சிறப்பு பூஜைகளும் ஆரம்பமாகி உள்ளன. பாலக்காடு ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. இந்த பண்டிகைக்கு புத்தாடை எடுக்க பொதுமக்கள் திரண்டு கடைகளுக்கு சென்றனர்..
விழாக்கோலம்: இன்று பண்டிகை என்பதால், கேரள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீட்டு முன்பு அத்தப் பூ கோலம் போட்டு கொண்டாட்டங்களை தொடங்கினார்கள்.. பிறகு, அனைவரும் புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தினார்கள்.
மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்பது கேரளா பழமொழி. அதற்கேற்ப, அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்ந்து வருகிறார்கள்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications