மறக்க முடியுமா? ஊரெங்கும் கொரோனா.. “வந்தார் ஸ்டாலின்..” இந்த பாகுபலி மொமெண்ட்டுக்கு ஒரு வயசு!
சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் தான், 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' என்று தொடங்கி உறுதிமொழி எடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின்.
மே 7ஆம் தேதியான இன்றோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைகிறது.
இந்த ஓராண்டில் முதல்வர் ஸ்டாலின் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தாலும், அவரது மிக முக்கியமான, முதன்மையான சாதனை கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை மீட்டதுதான்.

மோசமான சூழலில் பொறுப்பு
உலகையே கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாகச் சூழ்ந்திருந்த காலகட்டத்தில், தமிழகத்தில் நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் நூற்றுக்கணக்கில் இறப்புகள் ஏற்பட்டு வந்த சூழலில் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்.
அன்று ஸ்டாலின் முன் இருந்த மிகப்பெரும் சவாலே கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பதுதான். தேர்தல் காரணமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கொரோனா அலை மக்களை அதிரவிட்ட நிலையில், மொத்தப் பொறுப்பும் ஸ்டாலின் தலைக்கு வந்தது.

பதவியேற்கும் முன்பே
சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற பின்னர், பதவியேற்பதற்கு முன்பே தமிழகத்தில் தினசரி அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, முதல்வராகப் பொறுப்பேற்ற அன்று மாலையே, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க புதிதாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

தடுப்பூசி பிரச்சனை
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேரத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு, மாநிலங்களுக்கு தடுப்பூசி தருவதில் பாரபட்சத்தைக் கடைபிடித்தது. தமிழ்நாட்டின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. தடுப்பூசி தயாரிக்க செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலையைத் திறக்கவேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி வாங்க அனுமதியுங்கள் என தொடர்ந்து குரல் கொடுத்தார் ஸ்டாலின்.
தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதை ஒரு இயக்கமாகவே மாற்றிக் காட்டினார். கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களில் பேசி, மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தினார். அதன் பலனாகவே இன்று தமிழ்நாட்டில் 91% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனாவை ஒழிக்க
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டார்.
"நான் எடுத்த முயற்சிகளால் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது, கொரோனாவே இல்லை என்ற சூழலை நான் உருவாக்கினேன் என்று தலை நிமிர்ந்து நீங்கள் சொல்லக் கூடிய அளவிற்கு பணியாற்றுவதே இப்போதைய எனது லட்சியம்" என்றார்.

பிபிஇ கிட் அணிந்து
கொரோனா அச்சுறுத்தல் சூழலில், களத்தில் இறங்கி பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு கவச உடை அணிந்து, கொரோனா வார்டுக்கே நேரில் சென்றார்.
இந்தியாவிலேயே பி.பி.இ. கிட் அணிந்து கொரோனா வார்டிற்குள் நேரில் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்த முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

ஓராண்டு ஸ்டாலின் ஆட்சி
முதல்வர் மீது அன்பு கொண்ட பலரும், அவரது வயதைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி வேண்டாம் என்று அறிவுறுத்தியும், மக்களிடையே கொரோனா சூழலில் தொலைந்த மனிதநேயத்தை மீட்பதற்கான முயற்சியாகவே இதைக் கருதி கொரோனா வார்டிற்குள் சென்றார்.
இன்று தமிழ்நாட்டில் கொரோன பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா இறப்பு கிட்டத்தட்ட இல்லை என்ற நிலைக்குச் சென்றுள்ளோம். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் நேரத்தில் கொரோனா பரவலை தடுக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளைச் சொல்வதும் முக்கியமானது.
-
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications