விஜய் ஆட்சியில் வெறும் 3% வளர்ச்சி.. ஆந்திராவுக்கு போன 3 கம்பெனிகள்! 1,418 வேலை வாய்ப்புகள் போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில், தமிழ்நாடு ஜிஎஸ்டி வருவாயில் வெறும் 3% வளர்ச்சியைதான் எட்டியிருக்கிறது. இதன் காரணமாக நம்மூருக்கு வர வேண்டிய முக்கிய 3 கம்பெனிகள், ஆந்திராவுக்கு கைமாறியிருக்கின்றன. இதன் காரணமாக சுமார் 1,418 வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன.

ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் பார்த்தால் தென் மாநிலங்கள்தான் தொழில் முதலீடுகளில் நல்ல ரெக்கர்டை கொண்டிருக்கின்றன. அதிலும் தமிழ்நாடு கடந்த காலங்களில் சிறப்பாகவே செயல்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு மொத்தமும் சொதப்பியிருக்கிறது. முதல் சறுக்கல், ஜிஎஸ்டி வரி வருவாயில் ஏற்பட்டது. பக்கத்து மாநிலங்கள் எல்லாம் இரட்டை இலக்கத்தில் வரி வருவாயை பதிவு செய்த நிலையில், தமிழ்நாடு அரசு வெறும் 3% வருவாயை மட்டும்தான் பதிவு செய்து.

tamil nadu vijay job jobs

எரிச்சரித்தபடியே நடந்துவிட்டது

இந்த பின்னடைவு, மாநிலத்திற்கான முதலீடுகளை காலி செய்துவிடும் என்று, நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். அவர்கள் எச்சரித்தபடியே தற்போது நடந்திருக்கிறது.

ஹூண்டாய், கியா கார்களின் உதிரிபாகங்களை, உற்பத்தி செய்து சப்ளை செய்யும் Hwashin, Seoyon, Iwamet ஆகிய 3 தென்கொரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு ஆந்திராவில் ஆலைகளை அமைக்க, அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இது ஆந்திர அரசின் உலகளாவிய உற்பத்தி முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் பெற்றிருக்கும் வெற்றியை காட்டுகிறது.

விஜய் அரசு மீது கேள்வி

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஏற்கெனவே Iwamet நிறுவனம் தமிழ்நாட்டில் ஒரு நிறுவனப் பதிவை செய்திருந்தது. Hwashin, Seoyon ஆகிய நிறுவனங்களுக்கு ஏற்கெனவே ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கிருஷ்ணகிரியில் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன என்பதுதான். இப்படி தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள் இருந்தாலும்.. அந்நிறுவனங்களின் முதலீடுகளை தமிழக அரசு ஈர்க்க தவறியிருக்கிறது. நம்மூருக்கு வர வேண்டிய கம்பெனிகள் வேறு மாநிலத்திற்கு சென்றிருப்பது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அசின் மீது கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

மொத்தம் ரூ.1,614 கோடி முதலீடு

இந்த நிறுவனங்கள் மூலம் மொத்தமாக ரூ.1,614 கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிருக்கிறது. தனித்தனியாக பார்த்தால்..

Hwashin நிறுவனம் ரூ.850 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இதன் மூலம் 100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Seoyon நிறுவனம் ரூ.514 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இதன் மூலம் 918 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Iwamet நிறுவனம் ரூ.250 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இதன் மூலம் 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமாக இந்த 3 நிறுவனங்களும் இணைந்து 1,418 வேலை வாய்ப்புகளை உருவாக்கும். 3 நிறுவனங்களும் ஆந்திராவின் அனந்தபூர் பகுதியில் தங்கள் உற்பத்தி ஆலைகளை நிறுவ இருக்கின்றன.

யானை பசிக்கு சோளப்பொறியா?

முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தென் கொரியாவுக்கு சென்று சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், இந்த 3 நிறுவனங்களும் கையை விட்டு போயிருக்கின்றன. இருப்பினும் கொரியாவில் மோட்டிவ் லிங்க் நிறுவனத்துடன் கீர்த்தனா நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தியதால், மின்சார வாகன உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக ரூ.300 கோடி முதலீடடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் யானை பசிக்கு சோளப்பொறியா? என்கிற கேள்வி எழுப்பியிருக்கிறது.

முதலீடுகளை ஈர்க்க, தமிழகத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான டைகன், கடந்த பிப்ரவரி மாதம் கொரியா டெஸ்க் என்கிற பிரத்யேக பிரிவை தொடங்கியது. இப்படி தொடங்கியும் கூட.. தமிழ்நாட்டிற்கான முதலீடு கையை விட்டு போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+