சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அமைச்சர் பதவி யாருக்கு... அதிமுகவில் பெரும் கோஷ்டி பூசல்.. 'பிக் பாஸ்' தீர்ப்பு என்னவோ!

ஓபி ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி இல்லை என்றுதான் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிமுக ஒரே ஒரு இடத்தில் ஜெயிச்சாலும் ஜெயிச்சது, மத்திய அமைச்சர் பதவிக்கு ஏகப்பட்ட போட்டிகள், குழப்பங்கள் நடந்து வருகின்றன.

போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் அதிமுக சறுக்கி விழ, தேனியில் மட்டும் அபார வெற்றியை பெற்றுள்ளது.

இதன் காரணம் இன்னும் யாருக்கும் முழுசா தெரியவில்லை. ஆனால் மகன் வெற்றி பெற்றுவிட்டதால், தன் மகனுக்கு அமைச்சர் பதவியை தந்தே ஆக வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டு வருகிறார்.

10 கோடியா.. போய் தொகுதியை கவனிங்க.. கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி அட்வைஸ்10 கோடியா.. போய் தொகுதியை கவனிங்க.. கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி அட்வைஸ்

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

ஆனால் கட்சியில் உள்ள சீனியர்களோ இதை ஏற்கவே இல்லையாம். குறிப்பாக, கட்சியின் சீனியர், அனுபவஸ்தர், வைத்திலிங்கத்துக்குதான் மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் எடப்பாடியை அணுகி எடுத்து சொல்லி உள்ளனர். இதனால் எடப்பாடியும் மூத்த நிர்வாகிகளின் கோரிக்கையை பாஜக எடுத்து சொல்ல முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.

ராஜ்யசபா சீட்

ராஜ்யசபா சீட்

ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் நிறைய பனிப்போர்கள் நடந்து வரும்நிலையில், மத்திய அமைச்சர் பதவியை வைத்து மேலும் விரிசல்கள் விரிவடைந்து வருகின்றன. ஓபிஎஸ், சுற்றி சுற்றி மகனுக்கு மத்திய அமைச்சரவையில் சீட்டுக்காக பாஜகவை நெருக்கி வருகிறாரே தவிர, மற்ற அதிமுகவினரின் ராஜ்ய சபா சீட் பற்றியெல்லாம் அங்கு பேசவே இல்லையாம்.

மேலும் விரிசல்?

மேலும் விரிசல்?

இது அதிமுகவினருக்கு மேலும் கடுப்பை தந்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் இடையே இருந்த விரிசல், கட்சிக்குள்ளேயே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்கிறார்கள்.

ஏறத்தாழ உறுதி

ஏறத்தாழ உறுதி

ஒருவேளை சீனியர் நபர் வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி தரப்படுமானால், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய இணை அமைச்சர் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. கடைசி நிலவர தகவல் என்னவென்றால், வைத்திலிங்கம் மத்திய அமைச்சராவது ஏறத்தாழ உறுதி ஆகி உள்ளதாம்! இது எப்படியோ இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என்கிறார்கள்!

English summary
OPS son OP Raveendranath is said to be unlikely to get a ministerial post. At the same time, ADMK Senior Minister Vaidhyalingam is almost sure that the ministerial post
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X