இப்போவாச்சும் வாயை திறங்க ஸ்டாலின் சார்! ஜெம் வீரமணி வழக்கு குறித்து திமுக மீது விஜய் சரமாரி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணி விஷயத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் சீரியஸான நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், திமுக ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விஜய் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விஷயம் குறித்து இப்போதாவது வாயை திறந்து பேச வேண்டும் என்று விஜய், மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

மதுராந்தகத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், "இளம்பெண்களையும், சிறுமிகளையும் பல ஆண்டுகளாக ஒரு நபர் சீரழித்து வந்துள்ளார். இந்த விவகாரம் முந்தைய திமுக ஆட்சியின்போதே புகாராக வெளிவந்த போதிலும், ஒட்டுமொத்த வழக்கும் அதன் ஹிஸ்டரியும் அப்படியே அமைதியாக மூடி மறைக்கப்பட்டது. இதற்கு பின்னால் திமுகவுக்குள் அப்படி என்ன டீலிங் நடந்தது ஐயா?

Vijay

இத்தனை ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்த வழக்கை தவெக அரசு அமைந்த பிறகுதான் தோண்டி எடுத்து, குற்றவாளியை கைது செய்தது சிறையில் அடைத்துள்ளோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார், இப்போது வாயை திறந்து பேசுங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களும் இந்த விஷயத்தில் ஏன் மௌனம் காக்கிறார்கள்? பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து பேசும் தலைவர்கள், இத்தனை ஆண்டுகள் சிறுமிகள் சீரழிக்கப்பட்போது எங்கு போயிருந்தார்கள்?

இந்த விவகாரத்தில் திமுகவும் பேசவில்லை, அதிமுகவும் பேசவில்லை. இரு திராவிட கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் இடையே அப்படி என்ன ரகசிய உடன்பாடும் கூட்டும் நிலவுகிறது" என்று கடுமையாக பேசியிருந்தார்.

இந்த வழக்கு குறித்து வெளியில் பேசக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் விஜய் பேச்சு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இது சட்ட பிரச்சனையாக மாறும் என்று திமுகவினர் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+