ஏங்க இருங்க.. கம்முனு இரு! நிருபரெல்லாம் இருக்காங்க.. என்னங்குற! ஆவேசமான எடப்பாடி.. அதிர்ந்த போலீஸ்
சென்னை: அதிமுகவினரையும், தன்னையும் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட காவலர்களிடம் எடப்பாடி பழனிசாமி எகிறிய நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது.
ஏங்க இருங்க.. கம்முனு இரு.. நிருபரெல்லாம் இருக்காங்க.. என்னங்குற.. எனக் கேட்டு எடப்படி பழனிசாமி ஆவேசமடைந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பை முடித்த பிறகே காவல்துறை வாகனத்தில் ஏறினார் எடப்பாடி பழனிசாமி.

ஜனநாயக படுகொலை
தமிழக சட்டசபையில் ஜனநாயக படுகொலை நடப்பதாக கூறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என அறிவுறுத்திய காவல்துறையினர் அதிமுகவினரையும், எடப்பாடி பழனிசாமியையும் கைது செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

'ஏங்க இருங்க'
அப்போது அவரைச் சுற்றி நின்ற அதிமுகவினரை வேனில் ஏறுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதனால் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து பேட்டிக்கு மத்தியில் போலீஸாரை பார்த்து டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, ''ஏங்க இருங்க.. கம்முனு இரு.. நிருபரெல்லாம் இருக்காங்க.. இப்ப என்னங்குற..'' என ஆவேசமடைந்தார். இதையடுத்து அங்கிருந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷமிட்டனர். இதனால் அந்த இடம் பரபரப்பானது.

எடப்பாடி கோபம்
ஆனால் போலீஸார் நிலைமையை இன்னும் சிக்கலாக்க விரும்பாததால் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பை முடிக்கும் வரை காத்திருந்தனர். அப்போதும் அரசுக்கு எதிராகவும், காவல்துறையினருக்கு எதிராகவும் அதிமுகவினர் முழக்கங்கள் எழுப்பினர். பேசிக்கொண்டிருந்த போதே எடப்பாடி பழனிசாமிக்கு வந்த கோபத்தை பார்த்து அவரது சொந்தக் கட்சிக்காரர்களே ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள்.

சபையில் ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி சாலையில் அமர்ந்து இப்படி ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் மற்றொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் கூலாக அமர்ந்திருந்தார். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications