"எதிர்க்கட்சித் தலைவர் பதவி".. விட்ட இடத்திலிருந்து விட்டதை பிடிக்கும் ஓபிஎஸ்.. எடப்பாடிக்கு ஷாக்
சென்னை: அதிமுக அலுவலக தீர்ப்புக்கு பின்னர் கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகவினர் என்ன செய்கிறார்கள் தெரியுமா?
Recommended Video
அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ்ஸும் அவர் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் பல கட்ட விசாரணைகளை நடத்தி முடித்தது.
இதையடுத்து கடந்த 17ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு கூட்டம் செல்லாது என ஹைகோர்ட் தீர்ப்பளித்தது.

ஓபிஎஸ்ஸுக்கு வெற்றி
இது ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது. அதே நேரம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த தீர்ப்பு நிரந்தரமானது இல்லை என எடப்பாட பழனிசாமி தரப்பு தெரிவித்தாலும் இந்த தீர்ப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் ஓபிஎஸ் பக்கம் தாவலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ் தேனிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்தபடியே அவர் ஆதரவாளர்களை சந்தித்தும் அவர்களுடன் ஆலோசனை நடத்தியும் வருகிறார். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸை கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதரவு
அதாவது தீர்ப்பு வெளியானவுடன் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு கரங்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பொதுக் குழுவை ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் சேர்ந்து கூட்ட வேண்டும் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. அவ்வாறு கூட்டப்படும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தனக்கு இருக்கும் ஆதரவாளர்களை வைத்து மீண்டும் ஒற்றைத் தலைமை பதவியை உருவாக்க நேரிடும்.

ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல்
இதனால் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கலாகிவிடும். இத்தனை நாட்கள் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறியதும் வீணாகிவிடும். இதனால் எப்படியாவது எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் பொதுக் குழு உறுப்பினர்களில் பாதி பேரையாவது தன்வசம் இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் தேனி வந்துள்ள ஓபிஎஸ்ஸை கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து ஆதரவு அளித்து வருவது அவருக்கு பலத்தையும் மனநிறைவையும் கொடுக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றியை குவித்தாலும் கொங்கு மண்டலத்தில் திமுகவால் சோபிக்க முடியவில்லை. இதற்கு காரணம் கொங்கு மண்டலத்தில் உள்ள மூத்த முன்னாள் அமைச்சர்கள் குறிப்பாக எடப்பாடி தரப்பினர் என சொல்லப்படுகிறது. ஆனால் தென் மண்டலத்தில் அதாவது ஓபிஎஸ் பொறுப்பு வகித்த இடங்களில் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த பாயிண்ட்டை வைத்தே எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையிலிருந்தே ஆதரவாளர்களை சேர்ப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications