சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொறுமையே பெருமை! கொஞ்சம் அடக்கி வாசிப்போம்! ஆதரவாளர்களிடம் சொல்லி வைத்த ஓபிஎஸ்? சைலண்ட் ர.ர.க்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தற்போது தான் தனக்கு ஆதரவான நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்தோ, சசிகலா, டிடிவி தினகரன் குறித்து தனது ஆதரவாளர்கள் பொதுவெளியில் பகிரங்கமாக விமர்சித்து பேச வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை எப்படி இரு நாட்டு ரசிகர்களும் மிகவும் பரபரப்புடனும் ஆர்வத்துடனும் பார்ப்பார்களோ அதே போல தற்போது அதிமுக எனும் கிரிக்கெட் மைதானத்தில் ஒற்றைத் தலைமை எனும் கோப்பைக்காக ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் போராடி வருகின்றனர்.

கிரிக்கெட் போலவே சிக்ஸர், நோ பால், விக்கெட் ,யார்ர்க்கர் என இரு தரப்பினரும் மாறி மாறி களமிறங்கி விளையாடி வரும் நிலையில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற போவது யார் என்பதுதான் கிளைமாக்ஸ்.

3 மேட்டர்.. 2 அல்டிமேட் பிளான்.. எல்லாமே போச்சா.. இதான் 3 மேட்டர்.. 2 அல்டிமேட் பிளான்.. எல்லாமே போச்சா.. இதான்

அதிமுகவில் மோதல்

அதிமுகவில் மோதல்

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எப்படியாவது அதிமுகவிலிருந்து முற்றிலுமாக துரத்தி விட வேண்டும் என மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் அந்த பொதுக்குழுவிலேயே அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.

"டைம் அவுட்"

இப்படி அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி இருந்த நிலையில் தற்போது "டைம் அவுட்" இடைவேளைக்குப் பிறகு அடித்து ஆடும் பேட்ஸ்மேன் போல மிகவும் உற்சாகமாக இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு சாதமாக கிடைத்துள்ள நிலையில் அது நிரந்தரமல்ல என்பதனை உணர்ந்துள்ள ஓபிஎஸ் அதற்குள்ளாக அதிமுகவில் தனது ஆதரவு மற்றும் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள் வேண்டும் என்பதற்காக சாதுரியமாக காய்களை நகர்த்தி வருகிறார்.

பின்னடைவுகளுக்கு காரணம்?

பின்னடைவுகளுக்கு காரணம்?

இதனிடையே அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் பின்னடைவுகளுக்கு காரணம் அவர் எடுத்த அவசர முடிவுகள் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளின் சர்ச்சை பேச்சுகள் தான் காரணம் என்பதை உணர்ந்து இருக்கிறார் ஓபிஎஸ். தானும் அது போன்ற அவசர முடிவுகளை எடுத்து சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதோடு தனது ஆதரவு நிர்வாகிகளையும் அதுபோல் பொது வெளிகளில் பேச வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். குறிப்பாக அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பிற்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியையோ அவரது ஆதரவு நிர்வாகிகளையோ வெளிப்படையாக விமர்சிக்க வேண்டாம் என

அமைதி காக்க வேண்டும்

அமைதி காக்க வேண்டும்

குறிப்பாக சசிகலா டிடிவி தினகரன் குறித்து பொதுவெளியில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க வேண்டாம் என அவரது ஆதரவாளர்களை அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் விமர்சித்து வந்த அதிமுக ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் தற்போது அமைதி காத்து வருகின்றனர். அதே நேரத்தில் இதுவரை ஒரு நிர்வாகி கூட சசிகலா டிடிவி தினகரன் குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இரு தரப்பினரும் அடுத்தடுத்து தனது நிர்வாகிகளை மௌனம் காக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கும் நிலையில் கடைசியில் வெல்லப் போவது யார் என்பதனை இறுதிப்போட்டி வரை அமர்ந்து பார்வையாளர்களாக தான் பார்க்க வேண்டும்.

English summary
It has been reported that O. Panneerselvam has instructed his supporters not to publicly criticize Edappadi Palaniswami, Sasikala or TTV Dhinakaran ; எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரனை பகிரங்கமாக விமர்சிக்க வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X