ஓபிஎஸ் போடும் டாஸ்.. பூ விழுந்தால் ‘சவுத் தல விழுந்தால் ‘நார்த்’..! அடுத்தடுத்த ஆக்ஷனில் தீவிரம்..!
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தீர்ப்பு சாதகமாக வந்தால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக தொடரவும், எதிராக வந்தால் டிடிவி தினகரன் சசிகலா ஆகிருடன் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என வைரமுத்து ஓபிஎஸ் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல்களுக்கு பிறகு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுக்குழு கூட்டம்
இதனிடையே சென்னை வானாகரத்தில் கடந்த ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மற்றும் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கு விசாரணை
வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் என இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமாக தங்கள் வாதங்களை இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதனால் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதே இரு தரப்பு ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஓபிஎஸ் தயார்
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தொடர்ந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் தொடர்வார் அதே நேரத்தில் செல்லும் என அறிவிக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது போல ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் ஆவார்.

டிடிவி, சசிகலா
இதன் காரணமாக குழப்பத்தில் இருந்தாலும் ஒரு தெளிவான முடிவை எடுத்திருக்கிறார் ஓபிஎஸ். அதாவது தனக்கு சாதகமாக வந்தால் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடரவும் எதிராக தீர்ப்பு வந்தால் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் இணைந்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கவும் ஓபிஎஸ் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications