ம்ஹும்.. செல்லாது செல்லாது! ஓபிஎஸ்ஸை கைவிட்ட ‘தாமரை’! எவ்வளவோ முயன்றும் முடியலையே! எடப்பாடி ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜி 20 மாநாட்டு தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என டெல்லி பாஜக தலைமை எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தன்னை பாஜக தலைமை கைவிட்டு விட்டதோ என ஓபிஎஸ் அதிருப்தியில் இருக்கிறார். இது தொடர்பாக டெல்லி தரப்பை தொடர்பு கொண்டு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக தற்போது இடைக்கால பொது செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்கனவே தான் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிவரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே ஆறு மதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த மோதல் போக்கு நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இடையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் விசாரணை என இடையில் இரு தரப்புக்கும் ஆறுதல் அளிக்கும் சில விஷயங்கள் நடைபெற்றாலும் அது அத்தோடு முடிவடைந்து விடாது

அதிமுக பின்னடைவு

அதிமுக பின்னடைவு

அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் அடுத்த கட்டங்களை சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது இதனால் தொண்டர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர். தமிழகத்தின் மிகச் சிறிய அரசியல் கட்சிகள் கூட மத்திய பாஜகவுக்கு எதிராகவும் மாநில திமுகவுக்கு எதிராகவும் திமுக அரசியல் செய்து வருகின்றன. தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த கட்சியாக இருக்கும் அதிமுக இது போன்ற உட்கட்சி விவகாரங்களால் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

எடப்பாடி - ஓபிஎஸ்

எடப்பாடி - ஓபிஎஸ்

நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி ஓபிஎஸ் இணைய வேண்டும் என பாஜக தலைமை விரும்பியது. மேலும் அவர்களுடன் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரும் சேர்ந்தால் அதிமுகவுக்கு கூடுதல் வலிமை கிடைக்கும் இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஓரளவு கௌரவமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என பாஜக தலைமை கருதியது. இருமுறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களிலும் இந்தியா முழுவதும் பெரிய அளவில் பாஜக வெற்றி பெற்றாலும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் ஒன்று இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதே பெரிய விஷயமாக இருக்கிறது.

பாஜக தலைமை

பாஜக தலைமை

இடையில் பாஜக தலைமை வேறு அடிக்கடி தமிழக தலைவர்களை மாற்றி வந்தது. தற்போது தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணாமலை திமுகவை தீவிரமாக எதிர்த்து வருகிறார். ஆனால் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை பாஜகவுக்கு இன்னும் உரிய வெற்றி கிடைக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட நான்கு எம்எல்ஏக்கள் கிடைத்தாலும் அது அதிமுகவின் தயவால் தான் கிடைத்தது. அண்ணாமலை கூட தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை பெரிதும் நம்பி இருக்கிறது பாஜக. தற்போது குஜராத் தேர்தலில் கிடைத்திருக்கும் வெற்றி அந்தக் கட்சியை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தாலும் டெல்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி இமாச்சலப் பிரதேசத்தில் நூலிழையில் பறிபோன வெற்றி வாய்ப்பு அந்தக் கட்சியை யோசிக்க வைத்திருக்கிறது.

விடாப்பிடி எடப்பாடி

விடாப்பிடி எடப்பாடி

இதனால் பிற மாநிலங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பாஜக தலைவர்களுக்கு டெல்லி தலைமை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற வேண்டுமானால் எடப்பாடி ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் நான்கு அணிகளாக இல்லாமல் ஒன்றாக சேர வேண்டும் இல்லையேல் கூட்டணியாவது சேர்த்து தேர்தலை சந்திக்க பாஜக தலைமை திட்டமிட்டது. இது குறித்து கட்சியின் தேசிய தலைவர்கள் தொடங்கி உள்ளூர் தலைவர்கள் வரை அதிமுக இணைய வேண்டும் எனக் கூறி வருகின்றார். ஆனால் யாரையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவே முடியாது என விடாப்பிடியாக இருக்கிறார் எடப்பாடி. அதிமுகவை பொறுத்தவரை தான் தலைமை மற்றவர்களுக்கு இடமில்லை என உறுதியாக கூறிவிட்டார்.

ஓபிஎஸ்ஸை கைவிடும் டெல்லி

ஓபிஎஸ்ஸை கைவிடும் டெல்லி

இதுகுறித்து பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக்கொடுக்காமல் இருப்பதால் அவரை பகைத்துக் கொள்ள பாஜக தலைமை விரும்பவில்லை காரணம் 90 சதவீத எம்எல்ஏக்கள் ஆதரவு 95% மாவட்ட செயலாளர்கள் ஆதரவு என அதிமுகவின் தற்போதைய அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பகைத்துக் கொள்ள விரும்பாத பாஜக தலைமை ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இதை உறுதி செய்யும் வகையிலேயே கடந்த சில நாட்களாக சில நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

கடும் அதிருப்தி

கடும் அதிருப்தி

அந்த வகையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜி 20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முதல்வர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட தமிழகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள இடைக்கால பொதுச் செயலாளர் என அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்தி அடைந்த நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

தோல்வி

தோல்வி

அது தொடர்பாக உரிய பதில் கிடைக்காத நிலையில் டெல்லி தலைமையை தொடர்பு கொள்ள ஓபிஎஸ் முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது மகன் ஒபி ரவீந்திரநாத் தனக்கு நெருங்கமான டெல்லி வட்டாரங்கள் மூலம் எவ்வளவோ முயற்சித்தும் சந்திப்புக்கு டெல்லி தலைமை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ் தரப்பு நேரடியாக பிரதமர் அல்லது அமித்ஷாவை சந்திக்க தீவிரமாக முயன்று வருவதாகவும் ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை என்கின்றனர் தேனிதரப்பினர். இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கும் ஓபிஎஸ் அடுத்து என்ன செய்வது என தீவிர ஆலோசனையில் இருக்கிறார் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+