100% கன்பாஃர்ம்! தவெக+அதிமுதொஉமீக! விஜய் உடன் கூட்டணி சேரும் ஓபிஎஸ்! டிசம்பரில் வெளியாகும் அறிவிப்பு
சென்னை: பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை கழகமாக மாற்றிய ஓ.பன்னீர்செல்வம் விஜய் உடன் தான் கூட்டணி சேர இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் திரைத்துறை மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த பிரபலங்கள் கூட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கட்சியில் சேர்வார்கள் என பேசப்பட்டது.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என பேசிக்கொண்டிருக்கும்போதே அதிமுகவின் மிக மூத்த சீனியரான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து திராவிடப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம்
தற்போது அடுத்ததாக விஜயை நம்பி யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்ற பேச்சும் எழ ஆரம்பித்திருக்கிறது. திமுகவைப் பொருத்தவரை அசுரக் கூட்டணி பலத்துடன் இருக்கிறது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அந்தக் கூட்டணி தொடர்கிறது. காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்ன பிற கட்சிகள் என அந்தக் கூட்டணி மிகப் பலமாக இருக்கிறது.
தமிழக அரசியல் திருப்பம்
அதிமுகவை பொறுத்தவரை பாஜகவை தவிர தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. தேமுதிக, பாமக கூட்டணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தேமுதிக மட்டும் ஜனவரியில் தனது முடிவை அறிவிக்கும் எனக் கூறியிருக்கிறார் அந்த கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த். இது ஒரு புறம் இருக்க எடப்பாடி பழனிச்சாமியால் எண்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
டிடிவி தினகரன்
நாங்கள் இணையும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் பெரிய கூட்டணியாக இருக்கும் என பேசி வருகிறார் டிடிவி தினகரன். அதே நேரத்தில் அவர் என்.டி.ஏ. கூட்டணியில் இணைவார் என்பதை உறுதி செய்யவில்லை. அதே நேரத்தில் விஜய் தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாக வருவார் எனக் கூறி வருகிறார். இதனால் டிடிவி தினகரன் விஜயுடன் கூட்டணி சேரலாம் என சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ் புதிய கட்சி
இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் மீண்டும் சேர்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் பலனளிக்காததால் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஆன ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை ஆரம்பித்த அவர் அதனை கட்சியாக மாற்றி பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என பேசப்பட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் விஜய் உடன் தான் உறுதியாக கூட்டணி வைப்பார் என்கின்றனர் தமிழக வெற்றி கழக தரப்பினர்.
ஓபிஎஸ் விஜய் கூட்டணி
இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. டிசம்பர் இறுதியில் கட்சி பெயர் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஓபிஎஸ், ஜனவரியில் விஜயுடன் கூட்டணி அமைப்பார் என்கின்றனர். சமீபத்தில் நடிகர் ஜீவா ரவி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவர் மூலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை சேர்ந்த பிரபலங்கள் கூட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. தேர்தல் மேலும் சில முன்னாள் அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் திரை துறையினரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications