எக்ஸாமே கிடையாது.. திருச்சி ஆயுத தொழிற்சாலையில் 1,500 பணியிடங்கள்.. டிப்ளமோ, டிகிரி தகுதி தான்!
சென்னை: மத்திய அரசு நிறுவனமான திருச்சியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் 1500 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், என்னென்ன கல்வித் தகுதிகள், எப்படி விண்ணப்பிக்க முடியும் என்பது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் திருச்சி ஆயுத தொழிற்சாலை இயங்கி வருகிறது. ரைபிள்கள் உள்ளிட்டவை இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த தொழிற்சாலை 1967 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் திருச்சியில் துவங்கி வைக்கப்பட்டது.

சுமார் 1,500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஆயுத தொழிற்சாலையில் அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. என்ஜினியரிங் டிப்ளமோ - மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், சிவில், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் மற்றும் கணினி பொறியியல் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. என்ஜினியரிங் (பி.இ/பி.டெக்) - மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் ஆகியவற்றில் பி.இ/பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. என்ஜினியரிங் அல்லாத பிற டிகிரி (BBA/ B.Com/ B.Sc/ BA/ BCA) - இயற்பியல் / வேதியியல் / கணினி அறிவியல் & பயன்பாடு / கணிதம் / வரலாறு / ஆங்கிலம் / பொருளாதாரம் / வணிகம் / வணிக நிர்வாகம் / புள்ளியியல் / உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிகிரி முடித்து 4 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம் எவ்வளவு?:
டிப்ளமோ அப்ரெண்டீஸ்: ரூ.8,000/-
என்ஜினியரீங் பணியிடம்: (பி.இ/பி.டெக்) பயிற்சி - ரூ.9,000/-
டிகிரி பணியிடம்: (பி.எஸ்சி/ பி.ஏ/ பி.பி.ஏ/ பி.காம்/ பிசிஏ) - ரூ.9,000/-
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடத்திற்கு தேவையான அசல் சான்றிதழ் மற்றும் நகலுடன் வர வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2025 ஆகும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:
Community Hall, OFT-16
20.06.2025 at 09.00 AM
தேர்வர்கள் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள: https://nats.education.gov.in/












Click it and Unblock the Notifications