பரந்தூர் விமான நிலையம்.. விஜய் எடுத்த முடிவு! மாமல்லபுரத்தில் அமித்ஷாவுடன் அப்படி என்னதான் நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்... அரசியல் காரணங்களுக்காக திட்டங்களை நிறுத்துவது ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சியையும் பாதிக்கும் என்று கூறி திமுக இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது.. ஆனால், முதலமைச்சர் இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பதன் பின்னணி என்ன? இதுகுறித்து நமக்கு சில எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் கிடைத்துள்ளன.

சமீபத்தில் மாமல்லபுரத்தில் நிகழ்ந்த முக்கிய சந்திப்புக்கு பிறகு, சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நிகழ்த்திய அதிரடி அறிவிப்புகள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Parandur Airport

இன்றைய தினமும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.. வருடத்துக்கு 3 சிலிண்டர்கள் மற்றும் மாநகர, நகராட்சிப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளார்.. அத்துடன் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தவெக அரசால் அதிகாரப்பூர்வமாக கைவிடப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி அறிவிப்புக்கு திமுக தரப்பில் உடனடியாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளர்ச்சியையும் எலக்ட்ரானிக்ஸ் பெருக்கத்தையும் சுட்டிக்காட்டி, இந்த விமான நிலையம் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியத் தேவை என்று தங்கம் தென்னரசு ஆணித்தரமாக சொல்லி உள்ளார்..

சொன்னதை நிறைவேற்றிய விஜய்

இந்த திட்டம் கைவிடப்படுவது ஒசூர் விமான நிலைய இழப்பைப் போல மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு இன்னொரு பெரும் பின்னடைவாக மாறும் என்பதுடன், திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்துக்காக இந்த திட்டத்தை ரத்து செய்வது பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் என்றும் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.

ஆனால், இன்றைய தினம் மக்கள் நலத் திட்டங்களை அறிவித்ததுமே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் துவங்கி விட்டார் முதலமைச்சர் விஜய் என்று தவெகவினர் பிரச்சாரம் செய்யத் துவங்கிவிட்டனர்., எனினும். இதில் பரந்தூர் திட்டம் கைவிடப்படும் என்கிற அறிவிப்பு தான் அரசியல் ரீதியாக உற்று கவனிக்கப்படுகிறது.

எனவே இதில் ஏதாவது அதிசயம் நடந்துள்ளதா? என நாம் இதுகுறித்து விசாரித்தபோது, சில பிரத்யேகமான கிசுகிசு தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

அமித்ஷாவிடம் என்ன பேசினார் விஜய்

அதாவது, தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக சமீபத்தில் மாமல்லபுரம் வந்திருந்தார் அமித்ஷா. அவரை விஜய்யும் வரவேற்றார். அந்த சந்திப்பில் நிறைய விஷயங்கள் அரசியல் ரீதியாக பேசப்பட்டதாம். அதில் ஒன்று தான் பரந்தூர் விமான நிலைய திட்டம்.

அமித்ஷாவிடம் விஜய் பேசும்போது, "இந்த திட்டத்தை கை விடுவதாக இருக்கிறோம்.. இதை மத்திய அரசு ஏற்க வேண்டும்" என ஆரம்பித்து அதில் தனக்குள்ள சிக்கல்களையும் விவரித்ததுடன், விமான நிலைய விரிவாக்கத்துக்கு புதிய இடம் ஒதுக்குகிறோம் என்றெல்லாம் சொல்லியுள்ளார்.. இது தொடர்பாக, சில புள்ளி விபரங்களையும் அமித்ஷாவிடம் விஜய் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கிரீன் சிக்னல் தந்த அமித்ஷா?

அவைகளையெல்லாம் உன்னிப்பாக கேட்டுக் கொண்ட அமித்ஷா, சில விளக்கங்களை கேட்டிருக்கிறார்.. உடனே விஜய்யும் சில பதில்களை தந்து, இத்திட்டத்தை கைவிட நீங்கள் அனுமதிக்க வேண்டும் என மீண்டும் கேட்டுள்ளார்.. அதற்கு அமித்ஷா "பார்க்கலாம்" என பாசிட்டிவ்வாக பதில் சொல்லியிருக்கிறார்.. ஆனால் உறுதி தரவில்லையாம்..

எனினும், இதுவே நமக்கு தந்த க்ரீன் சிக்னல் என்பதாக விஜய் எடுத்துக்கொண்டார். இந்த பின்னணியில் தான் இன்றைய தினம் இந்த திட்டத்தை கைவிட முடிவு செய்து பேரவையில் அறிவித்தார் விஜய் " என்று ஆலோசகர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது சாத்தியமாகுமா?

ஒருவேளை இந்த திட்டம் சாத்தியமானால், அது விவசாயிகளின் நீண்டகாலப் போராட்டத்திற்கு வெற்றியைத் தருவதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் நிலமும் பாதுகாக்கப்படும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாகவே பார்க்கப்படும்.. அல்லது இது சாத்தியமாகாவிட்டால், ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டுகளின்படி தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் பாதிக்கப்படுவதோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கும் இது பின்னடைவாகவும் மாறக்கூடும்...!!

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+