ஜி-ஸ்கொயர் மறுத்த உடனே நடந்தது இதுதான்.. பரந்தூரில் திமுகவினரின் நிலங்கள்? ஆவணங்கள் கேட்கும் விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் 2வது விமான நிலையத் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ள தகவல்தான், தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.. சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து முதல்வர் விஜய் அதிரடி முடிவு எடுத்துள்ளார். பரந்தூர் பகுதியில் திமுக குடும்பத்தினரும், ஜி-ஸ்கொயர் நிறுவனமும் பினாமி பெயர்களில் நிலங்களை வாங்கி குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் விஜய் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகளின் தொடர் போராட்டங்கள், நில உரிமையாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பரந்தூர் விமான நிலையத் திட்டம் பேசுபொருளாகி இருந்தது.

Parandur Airport

பரந்தூர் விமான நிலைய திட்டம்

இப்படிப்பட்ட சூழலில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், தனது ஆலோசகர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இந்தத் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நிலங்களின் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பின்னால் பெரும் அரசியல் மற்றும் பொருளாதாரப் பின்னணிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, பல்வேறு தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

முதலமைச்சர் விஜய்

அதாவது, பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு, முதல்வர் விஜய் இதுகுறித்து ஆலோசகர்களிடம் விவாதித்தாராம்.. அப்போது அவர்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்த முடிவை மேற்கொண்டாராம் முதல்வர்.

குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகனான சபரீசனோடு தொடர்புடைய ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி-ஸ்கொயர் நிறுவனமும், திமுக குடும்பமும், திமுக அமைச்சர்களும் பரந்தூர் பகுதியில் நிறைய இடங்களை வாங்கி குவித்திருக்கிறார்கள். அந்த நிலத்தின் அருமை கருதியே விமான நிலைய திட்டத்தை பரந்தூர் பகுதிக்கு திமுக ஆட்சியில் கொண்டு செல்லப்ப ட்டது என்கிற பல்வேறு காரணிகளை முதல்வர் விஜய்யிடம் ஆலோசகர்கள் விவரித்திருக்கிறார்கள்..

விவசாயிகளின் நலன்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்பட்டாலும், திமுகவுக்கு எதிராக ஆலோசகர்கள் சொல்லிய ஆலோசனைகள் தான் இதில் பிரதானமாக பார்க்கப்படுகிறது.. அந்த வகையில்தான் இந்த திட்டத்தை ரத்து செய்தார் முதல்வர் விஜய்.

ஜி-ஸ்கொயர் நிறுவனம்

மேற்கண்ட தகவல்களை எல்லாம் 2 நாட்களுக்கு முன்பு விரிவாகவே நாம் எழுதியிருக்கிறோம். இந்த நிலையில், பரந்தூர் விவகாரம் சட்டமன்றத்தில் பேசப்பட்டபோது, ஜி-ஸ்கொயர் நிறுவனம், மாப்பிள்ளை என்கிற பெயர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உச்சரித்தனர்... இதையடுத்து, பரந்தூர் பகுதியில் தங்களுக்கு எந்த ஒரு நிலமும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது ஜி-ஸ்கொயர்.

இந்த மறுப்பு தகவல் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஆலோசகர்களிடம் மீண்டும் ஆலோசித்துள்ளார் முதல்வர் விஜய்.

ஆவணங்கள் கேட்கும் விஜய்?

அப்போது, "திமுக குடும்பத்தினரும் திமுக தலைவர்களும் தங்களின் பினாமி பெயர்களில் நிலத்தை வாங்கிக் குவித்தனர். அந்த நிலங்களும் பவர் ஆஃப் அட்டார்னி மூலம் நிலத்தின் மதிப்புகள் அதிகரிக்கச் செய்து அரசுக்கே அவர்கள் ஏற்கனவே விற்றுள்ளனர்.. பரந்துர் சுற்றி இன்னும் பல ஏக்கர் நிலங்கள் திமுகவினருக்கு சொந்தமாக இருக்கிறது" என்றெல்லாம் முதல்வருக்கு சொல்லப்பட்டுள்ளதாம்.

இதனையடுத்து, அதன் முழு விபரங்களும் சேகரித்து ஆவண ஆதாரங்களுடன் ஒரு ரிப்போர்ட் தருமாறு ஆலோசகர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர் விஜய். இப்போது வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவு துறையினரிடமும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக விற்கப்பட்ட நிலங்களின் பின்னணி குறித்தும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது அரசு இயந்திரம் " என்கிறது தலைமைச்செயலக வட்டாரம்..!!

-நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+