கண்டிப்பாக இதை செய்தே ஆகணும்! சென்னை மேயர் பிரியாவை சந்தித்த செளமியா அன்புமணி! என்ன காரணம் தெரியுமா?
சென்னை : சென்னை மாநகருக்கான காலநிலை மாற்ற வரைவு அறிக்கையில் காற்று மாசுபாடு , உயிர் பன்மைத்துவம் குறித்த செயல்திட்டங்கள் இடம்பெற வேண்டும் எனவும், வரைவு அறிக்கை குறித்து சென்னையில் 200 வார்டுகளிலும் பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் மாநகராட்சி மேயர் பிரியாவை சந்தித்த பிறகு சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.
சென்னை மாநகருக்கான ' காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு அறிக்கை ' மாநகராட்சி இணையதளமான www.chennaicorporation.gov.in ல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 26 ம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி , சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியாவை சந்தித்து வரைவு செயல் திட்டம் குறித்த தங்களது அமைப்பின் கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தார்.

செளமியா அன்புமணி
சென்னைக்கான காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு அறிக்கையில் காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பாகவும் , பயோ டைவர்சிட்டி எனும் உயிர் பன்மைத்துவம் குறித்தும் கருத்துகள் இடம் பெறவில்லை என்று தெரிவித்த அவர் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள 66 செயல்திட்டங்கள் குறித்தும் விரிவான விளக்கங்கள் இடம்பெற வேண்டும் எனவும் மாநாகராட்சிக்கு கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பசுமைத் தாயகம் சார்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் உட்பட பல இடங்களில் மரக்கன்று நட்டு நடுகிறோம் . காலநிலை மாற்றம் குறித்து 20 ஆண்டுகளாக பேசி வரும் ஒரே அமைப்பு பசுமைத் தாயகம்தான்.

காலநிலை மாற்ற வரைவு அறிக்கை
சென்னையில் காலநிலை மாற்ற வரைவு அறிக்கையை வெளியிட்டு கருத்து தெரிவிக்க இன்று இறுதி நாள் என்று கூறியிருந்தனர். அதை நீட்டிக்கவும் , தமிழில் வெளியிடவும் மேயரிடம் கோரிக்கை விடுத்தோம். சென்னைக்கு வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கையில் 66 திட்டங்கள் கூறப்பட்டுள்ளது , ஆனால் அதுபற்றி விரைவாக விளக்கப்படவில்லை. தமிழகத்தில் மக்கள் தொகை 7.5 கோடி. சென்னையில் மட்டும் ஒரு கோடி நபர்கள் வசித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை சீரமைக்க விரிவான திட்டம் தேவை , அவசர கதியில் அதை செயல்படுத்த முடியாது. நீடித்த செயல்திட்டமாக அது இருக்க வேண்டும்.

சென்னை வெள்ளம்
கடலோரம் வசிப்போர் , விளிம்புநிலையில் வாழ்வோரிடம் காலநிலை மாற்றம் குறத்து அதிகளவில் விழிப்புணர்வை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும். செஸ் ஒலிம்பியாட்டிற்கு வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் போல , காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளும் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும். சென்னையில் 200 வார்டுகளிலும் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். 2015 ல் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் விரும்பும் சென்னை
தற்போது வெளியிடப்பபட்ட அறிக்கையில் காற்று மாசு குறித்த பரிந்துரை இல்லை , bio diversity அழிவு குறித்தும் கருத்துகள் இடம் .பெறவில்லை. சிட்டுகுருவி , கிளிச்சத்தம் இல்லாமல் போக காரணம் bio diversityஅழிவுதான். சென்னை மாநகரை மேம்படுத்துவதற்காக 'நாம் விரும்பும் சென்னை ' என்ற அறிக்கையை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். 204 அமைப்பனரிடம் பேசி சென்னைக்கான அறிக்கையை வெளியிட்டதாக கூறியுள்ளார். ஆனால் 20 ஆண்டுகளாக செயல்படும் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை . சென்னை மாநகருக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க பசுமைத் தாயகம் தயாராக இருக்கிறது.

மக்கள் பங்களிப்பு
கூவம் சீரமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட 200 கோடி நிதி வீணாகிவிட்டது , 2007 முதல் சென்னையில் சாலை பாதுகாப்பு திட்டம் அமலில் இருந்ததாலும் அது பயன்தரவில்லை, சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நகரமாகவே சென்னை இப்போதும் இருக்கிறது . சென்னையில் பொதுப்போக்குவரத்து குறைந்துவிட்டது . சென்னையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு மழைநீர் கால்வாய் பணிகளை நிறைவுசெய்ய வேண்டும். சுற்றுச்சூழல் குறித்த விசயங்களில் மக்கள் பங்களிப்பு அவசியம் , எனவே பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும் ". என்று கூறினார்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications