சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் திறந்துவைத்த சென்னை மேம்பாலம்.. குப்பைகளால் குமுறும் வாகன ஓட்டிகள்! சிக்னல் கூட இல்லையாம்

Google Oneindia Tamil News

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த சென்னை மேடவாக்கம் புதிய மேம்பாலத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் சிக்னல், பேருந்து நிறுத்தங்கள் இல்லை என்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தென் சென்னையின் வளர்ச்சியடைந்த பகுதியாக வேளச்சேரி - தாம்பரம் இடையிலான பகுதி இருக்கிறது.

திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை! திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை!

ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகளை கொண்ட இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

வாகன நெரிசல்

வாகன நெரிசல்

குறிப்பாக தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் வழித்தடத்தில் வாகன நெரிசல் கடுமையாக இருந்து வந்தது. புறநகரிலிருந்து சென்னை வரும் மக்கள் இந்த சாலையை கடக்க 40 நிமிடங்களுக்கு மேலாகி வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இப்பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்

ரூ.146.41 கோடி மதிப்பு

ரூ.146.41 கோடி மதிப்பு

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரூ.146.41 கோடி மதிப்பில் மேடவாக்கத்தில் மறைமலையடிகள் பாலம் - இரும்புலியூர் சந்திப்பில் இருக்கும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் பரங்கிமலை - மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

2.03 கி.மீ. பாலம்

2.03 கி.மீ. பாலம்

2.03 கிலோ மீட்டர் தொலைவில் 11 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். குறிப்பாக மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதால் மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் எனக் கூறப்பட்டது.

 வாகன ஓட்டிகள் ஆறுதல்

வாகன ஓட்டிகள் ஆறுதல்

இந்த புதிய மேம்பாலத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் டிராபிக்கில் காத்திருக்காமல் சென்று வர முடியும். புதிய மேம்பாலம் திறக்கப்பட்டு உள்ளதால் சென்னை புறநகரிலிருந்து மத்திய சென்னை பகுதிக்கு நாள் தோறும் சென்று வரும் லட்சக்கணக்கான மக்கள் ஆறுதல் அடைந்தனர்.

குவியும் புகார்கள்

குவியும் புகார்கள்

மேம்பாலம் திறக்கப்பட்டு 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் அதுகுறித்து வாகன ஓட்டிகள் புகார்களை அடுக்கி வருகின்றனர். முறையான சாலைகள் இல்லை என்றும், பேருந்து நிறுத்தங்கள், ட்ராபிக் சிக்னல்கள் இல்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் குழப்பம் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதுபோல் மேம்பாலம் அருகே கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகள் அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுவதாக புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

English summary
People complaints that Medavakkam Flyover which is recently opened by Tamilnadu CM MK Stalin has not proper roads:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X