சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேரறிவாளன் விடுதலை: பாதுகாப்பை சமரசம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்று நம்புகிறோம்- அண்ணாமலை

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

விடுதலைக்கு பின் முதல் பேட்டி.. நல்லவன் வாழனும் என்பதே நீதி.. குறளை மேற்கோள்காட்டி பேசிய பேரறிவாளன் விடுதலைக்கு பின் முதல் பேட்டி.. நல்லவன் வாழனும் என்பதே நீதி.. குறளை மேற்கோள்காட்டி பேசிய பேரறிவாளன்

தீர்ப்பு வாசிப்பு

தீர்ப்பு வாசிப்பு

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கினர். பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பை வாசித்தனர்.

Recommended Video

    Perarivalan First Speech After Release | Perarivalan Pressmeet | Oneindia Tamil
    பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை

    அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. அரசியலமைப்பின் 161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதாக சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அண்ணாமலை கருத்து

    அண்ணாமலை கருத்து

    இதையடுத்த பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    வரவேற்கிறோம்

    வரவேற்கிறோம்

    அதில் அவர், ‛‛பேரறிவாளனை உச்சநீதிமன்றம், அரசியல் அமைப்பு சட்டம் 142ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக்கொள்கிறது. நம் ஒற்றுமையும் பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்'' என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    The Supreme Court today ordered the release of Perarivalan in connection with the assassination of former Prime Minister Rajiv Gandhi. Tamil Nadu BJP leader Annamalai has said that we are accept the verdict of the Supreme Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X