பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு.. தொடர்ந்து 4வது முறையாக தமிழக அரசு அனுமதி
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உடல்நலக்குறைவை காரணம் காட்டி, பரோல் காலத்தை நீட்டிக்க, அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பரோல் காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 49 வயதாகும் பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலித்த தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது.
எனவே, மே மாதம் 28ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார் பேரறிவாளன். சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பரோல் காலம் முடிந்து கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பியபோது, மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பிறகு ஜூலை 28ம் தேதி பரோல் முடிவடைவதால் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்ட நிலையில், பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற தமிழக அரசு, பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்தது.
பிறகு ஜூலை 28ம் தேதி பரோல் முடிவடைதால் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்ட நிலையில், பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற தமிழக அரசு, பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்தது.
இப்போது மறுபடியும் பரோல் நீட்டிப்பு செய்ய அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஒரு மாத காலம் பரோலை நீட்டித்துள்ளது.
பரோல் காலத்தை பேரறிவாளன் இதுவரை என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடித்து வந்தாரோ அதையே பின்பற்ற வேண்டும் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications