Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலியல் வன்முறைக்கு நிரந்தர தீர்வு... சட்டங்கள் கடுமையாக வேண்டும் - விஜயகாந்த்

பள்ளி மாணவிகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் கண்டனத்துக்கு உரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்முறைகள் கண்டனத்துக்கு உரியது என்று கூறியுள்ள விஜயகாந்த், இதற்கு நிரந்தர தீர்வு காண சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பள்ளி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொந்தரவினால் கோவையில் பிளஸ் 2 படித்து வந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த சோகம் மறைவதற்குள் கரூரில் இன்று ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் வடு இன்னும் ஆறாத நிலையில் கரூரில் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

பயமாக இருக்கு

பயமாக இருக்கு

அந்த மாணவி மரணத்திற்கு முன்பாக பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும். என்னை யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழ்வதற்கு ஆசைப்பட்டேன். ஆனா இப்போது பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பண்ண ஆசை. ஆனா முடியவில்லை என்று உருக்கமாக எழுதியிருப்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

பெற்றோர்கள் துணை வேண்டும்

பெற்றோர்கள் துணை வேண்டும்

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் கடும் கண்டனத்திற்கு உரியது. மாணவிகள் தற்கொலை முடிவு எடுக்காமல் இதற்கு யார் காரணமோ அவர்களை எதிர்க்கும் தைரியத்தை வரவழைத்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

தொடரும் வன்கொடுமை

தொடரும் வன்கொடுமை

மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் கடும் தண்டனை வழங்க வேண்டும். மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல திண்டுக்கல்லில் செவிலியர் கல்லூரி பாலியல் வன்கொடுமையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Karur பள்ளி மாணவியின் தாயார் கண்ணீர் பேட்டி | Oneindia Tamil
    நிரந்தர தீர்வு

    நிரந்தர தீர்வு

    பெண்கள் எவ்வித அச்சமும் இன்றி நள்ளிரவில் என்றைக்கு தனியாக நடந்து செல்கிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான சுதந்திரம் பெற்றது என்ற காந்தியடிகளின் கூற்றுப்படி பார்த்தால், இந்நாடு இன்னமும் சுதந்திரம் பெறவில்லை என்றே கருதவேண்டும். இதுபோன்ற பாலியல் வன்முறைகள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடுமையான சட்டத்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+