சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் அப்பவே அந்த மாதிரி..!ஸ்டாலின் அச்சப்பட மாட்டார்!ஆளுநருக்கு நினைவூட்டும் பீட்டர் அல்போன்ஸ்.!

ஆளுநர் வரம்பை மீறினால் முதல்வர் ஸ்டாலின் அச்சப்பட மாட்டார் என தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது. நெருப்பு இருந்தால் மட்டுமே வந்து அணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். ஆளுநர் வரம்பை மீறினால் முதல்வர் பயப்படமாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயிண்ட்டில் தயார் செய்து வைக்க வேண்டும்.

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும். ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும் என்று அந்த கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்க முடியாது

ஏற்க முடியாது

தமிழக ஆளுநர் ஒவ்வொரு துறை அதிகாரிகளின் தகவலையும் கேட்டிருப்பது என்பது ஏற்க முடியாது என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ், ஆளுநரின் அதிகாரத்தை தமிழக முதல்வர் மதிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் மத்திய அரசு ஆளுநர் மூலம் வரம்பு மீறி செயல்பட்டால் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

அதிகாரத்தில் தலையிடுவதா?

அதிகாரத்தில் தலையிடுவதா?

ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது. நெருப்பு இருந்தால் மட்டுமே வந்து அணைக்க வேண்டும். ஆளுநர் வரம்பை மீறினால் முதல்வர் பயப்படமாட்டார். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது மக்களிடையே இரட்டை ஆட்சி நடக்கின்றது என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

மக்களின் நம்பிக்கை

மக்களின் நம்பிக்கை

தமிழக அரசு நன்றாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாக இருக்கிறது. இந்நிலையில் ஆளுநரின் ஆளுநரின் தலையீடு தேவையற்றது. இந்த அரசை திசை திருப்பும் போக்காக இருந்து விடக்கூடாது என்றும் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

திமுக எதிர்ப்பு

திமுக எதிர்ப்பு

ஆளுநர் ஆய்வு செய்வது என்பது சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது இது போன்ற சர்ச்சை கிளம்பியது. ஜெயலலிதா அப்போது தமிழகத்தின் முதல்வர். இது போன்ற விஷயத்தில் சென்னா ரெட்டி ஈடுபட்டபோது, ஜெயலலிதா அதை கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்பை பார்த்து சென்னா ரெட்டி கைவிட்டார். கடந்த காலத்திலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்பாட்டுக்கு திமுக எதிர்த்தது.

விவாதம் ஏற்படுத்திய கடிதம்

விவாதம் ஏற்படுத்திய கடிதம்

இந்த சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களும் தயாராக இருக்குமாறு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இது தற்போது விவாதங்களை எழுப்பியுள்ளது.

English summary
The governorship is like a fire truck. Peter Alphonse, chairman of the Tamil Nadu State Minority Welfare Board, said the fire should be extinguished only if there is one. He also said that the Chief Minister would not be afraid if the Governor violated the limit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X