சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.. 132வது நாளாக நோ சேஞ்ச்.. இதுதான் காரணம்!
சென்னை : இன்று (செப்டம்பர் 30) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 ஆக உள்ளது. சென்னையில் டீசல் விலை 94.24 ரூபாய் ஆக விற்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில், கடைசியாக மே மாதம் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அதன்பிறகு பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 132-வது நாளாக இன்றும் மாற்றமில்லை.

பெட்ரோல் டீசல் விலை
இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையேற்றம் என்பது பெரும் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 102 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே எரிபொருள் விலையேற்றம் கடுமையாக இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டின் இறுதியில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருந்தது. எனினும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள்
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமுமில்லாமல் விற்பனையாகி வருகிறது.

கச்சா எண்ணெய்
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யாத நிலையில் இந்தியா மட்டும் 30 சதவீதம் சலுகை விலையில் ஏராளமாக கச்சா எண்ணைய்யை வாங்கி குவித்தது. இதன் காரணமாக அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை அதிகரித்தாலும் இந்தியாவில் மட்டும் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

தொடர்ந்து 132வது நாளாக
கடந்த மே 21ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் குறைத்தது. இதனால் மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. அதன் பிறகு தொடர்ந்து 132வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கு விற்கப்படுகிறது.

டெல்லி - பெங்களூர் நிலவரம்
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24- க்கும் விற்பனையாகி வருகிறது. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.72 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.62 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications