131வது நாளாக மாற்றமில்லை..ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் டீசல்.. அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் ரேட்!
சென்னை : கடந்த 130 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்ந்து வரும் நிலையில், இன்றும் சென்னையில் கடந்த நாட்களைப் போலவே ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில், பாஜக 4 மாநிலங்களிலும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சியை பிடித்துள்ளது.
கடந்த 125 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கும் கீழாகவே இருந்து வந்தது. போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி உள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் 110 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெயின் விலை அடுத்தநாளே 118 டாலராக அதிகரித்தது.

பெட்ரோல் டீசல் விலை
சுமார் 20 நாட்களாக உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 112.3 டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 8586.29 ரூபாயாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை உள்ளது. உத்திரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என யூகங்கள் கிளம்பி உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை
தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயரும் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் இன்று அல்லது நாளை பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கலாம் என கூறப்பட்டது. லிட்டருக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் விலை உயர்த்தப்படலாம் எனவும் பகீர் தகவல்கள் வெளியானது.

விலையில் மாற்றமில்லை
இந்நிலையில் கடந்த 127 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்கப்பட்டு வந்தது. எனினும் தொடர்ந்து 128வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் ரூ.91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் உயர்த்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
-
டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications