பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் - சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துங்கள் -விஜயகாந்த் வலியுறுத்தல்!
சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டித்து, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை உடனடியாக நிலை நிறுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில பகுதிகளில் சில மர்ம நபர்கள், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தாக்குல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பாஜக பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, கார், இருசக்கர வாகனங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. கோவை, திண்டுக்கல், சேலம், ராமநாதபுரம், மதுரை, சென்னை, திருப்பூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து, பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை, சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகள் மூலம், தமிழக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். மேலும், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குற்றவாளிகளை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்து வருகின்றனர். எனினும், ஆங்காங்கே இதுபோன்ற விரும்பதகாத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிதான் வருகிறது.
தமிழகத்தில் நிலவி வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு, பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை உடனடியாக நிலை நிறுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.
தற்போது, பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் தமிழகத்தில் பரவி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. கோவை, திருப்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டதோ? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
அதேசமயம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் இனிமேல் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு கவனம் செலுத்தி, பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டித்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை உடனடியாக நிலை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications