ஜல்லிக்கட்டுக்கு பிரம்மாண்ட அரங்கம்.. விரைவில் கட்டுமான பணிகள்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
சென்னை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பிரம்மாண்ட அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்போர்ட்ஸ்டார் சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் ஸ்போர்ட்ஸ்டார் சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதாவது அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறைக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்டத்துக்குமான வளர்ச்சி எல்லாவற்றையும் கடந்து, அனைத்து சமூகத்திற்குமான வளர்ச்சி. இதனை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

செஸ் ஒலிம்பியாட்
வளர்ச்சி என்பது வெறும் தொழிற் வளர்ச்சி என்பது அல்ல. அனைத்து துறையிலும் தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும். அப்படி விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான முக்கிய நடவடிக்கை தான் செஸ் ஒலிம்பியாட் போட்டி.44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200க்கும் அதிகமான நாடுகள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டது. அப்போது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டதால், தமிழ்நாட்டிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம்
இந்தியாவில் நடைபெறும் முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி இது. அது சென்னையில் நடைபெறுகிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் கிடைக்கும். செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதன் மூலம் தமிழக அரசு பெருமை கொள்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இந்த சூழலில், மாநாடு நடைபெறுவது பொருத்தமாக அமைந்துள்ளது.

கிரிக்கெட்டில் ஈடுபாடு
நானும் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஈடுபாடு உள்ளவன். பள்ளிக் காலத்தில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை தவறவிட மாட்டேன். மேயராக இருந்தபோடும், கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். எத்தகைய சூழலிலும், கிரிக்கெட் பார்ப்பதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தவறவிட மாட்டார். விளையாட்டுத்துறை கம்பீரமான துறை.

ஜல்லிக்கட்டு அரங்கம்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபின், விளையாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். பல்வேறு வீரர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம். சென்னை, கிருஷ்ணகிரி பகுதிகளில் விளையாட்டு அரங்கங்கள் திறக்கப்படவுள்ளது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாவற்றுக்கும் கிரீடம் வைத்தது போல், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு பிரம்மாண்ட அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications