சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம! கூவம் நதிக்கு கீழ் பாயும் மெட்ரோ.. 10ம் தேதி தொடங்கும் சேவை.. மோடி திறந்து வைக்கிறார்!

சென்னையில் கூவம் நதிக்கு அடியில் போடப்பட்டு இருக்கும் மெட்ரோ ரயில் பாதையை வரும் 10ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கூவம் நதிக்கு அடியில் போடப்பட்டு இருக்கும் மெட்ரோ ரயில் பாதையை வரும் 10ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்.

சென்னையில் மெட்ரோவிற்காக போடப்பட்ட முதற்கட்ட திட்டப்பணிகள் எல்லாம் நிறைவுக்கு வந்துள்ளது. ஆம், முதல்முறையாக சென்னையில் எந்தெந்த வழி தடங்களில் எல்லாம் மெட்ரோ அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டதோ, அது முழுமையாக நிறைவு பெற்று இருக்கிறது.

வரும் 10ம் தேதி சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடங்கப்பட இருக்கிறது. சென்னையில் இருக்கும் மற்ற மெட்ரோ சேவையை விட இது கொஞ்சம் வித்தியாசமானது.

மொத்தமாக முடிந்தது

மொத்தமாக முடிந்தது

சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை முதலில் மெட்ரோ போடப்பட்டது. அதன்பின் சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ சேவை இயக்கப்பட்டது. இது மொத்தம் 35 கிமீ ஆகும். மேலேயும், சாலைக்கு கீழேயும் இந்த மெட்ரோ அமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பாதை

புதிய பாதை

தற்போது புதிதாக சென்னை அண்ணாசாலை அருகே இருக்கும் டி.எம்.எஸ் முதல் வண்ணாரபேட்டை இடையே புதிய வழித்தட சேவை அமைக்கப்பட்டு இருக்கிறது. 10 கிமீ தூரத்திற்கு இந்த சேவை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல்பாட்டு அனுமதியை சில நாட்களுக்கு முன்புதான் ரயில்வே நிர்வாகம் அளித்தது.

என்ன சிறப்பு

என்ன சிறப்பு

இந்த மெட்ரோ சேவை கூவம் நதிக்கு அடியில் இயக்கப்பட உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை முதல் சென்ட்ரல் வரை கூவம் அடியில் ரயில் செல்லும். முதல்முறை சென்னையில் கூவம் நதிக்கு கீழ் இந்த ரயில் செல்கிறது. இதனால் இந்த வழித்தடம் இப்போதே வைரலாகி உள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 10ம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூர் வரும் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இந்த சேவையை திறந்து வைக்க உள்ளார். பொதுவாக தமிழகத்தில் மெட்ரோ சேவைகளை மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் தொடங்கி வைத்துக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PM Modi will inaugurate new metro lane in Chennai on coming Feb.10, which actually goes under Koovam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X