கொலையாளிகளாக மாறும் இளைய தலைமுறை..ஆன்லைன் சூதுதான் காரணம்! புதிய சட்டம் தேவை என ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை : ஆன்லைன் சூதாட்டம் மாணவர்களை கொலைகாரர்களாக ஆக்குவதாகவும், இதுபோன்ற சமூக தீமையை ஒழிக்க புதிய சட்டமே தீர்வு என பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணம் தேவைப்பட்டதால் மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேப்பூர் சேர்ந்த பட்டாத்தாள் என்ற 75 மூதாட்டி கடந்த 6ஆம் தேதி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் அணிந்திருந்த நகைகள் மாயமானது.

மூதாட்டி கொலை
குறித்து அப்பகுதியில் உள்ள நகை அடகு கடைகளில் போலீசார் விசாரணை நடத்திய போது அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவன் மூதாட்டியின் நகையை அடகுவைத்து தெரியவந்தது. இதையடுத்து பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த சூர்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு மூதாட்டியை கொன்று நகைகளை பறித்தது தெரியவந்தது இந்நிலையில்

பாமக நிறுவனர் ராமதாஸ்
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் மாணவர்களை கொலைகாரர்களாக ஆக்குவதாகவும், இதுபோன்ற சமூக தீமையை ஒழிக்க புதிய சட்டமே தீர்வு என பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்ட பதிவில், "கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

அரங்கேறும் கொலை
இத்தகைய கொடூரம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்! ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோகம் இதுவரை நடந்து வந்தது. இப்போது பணத்துக்காக கொலை செய்யும் கொடூர நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கி இருப்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டம் இன்னும் கொடிய வடிவம் எடுப்பதை அறிய முடியும்!ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதன் மூலம் தான் தற்கொலைகளையும், இளைய தலைமுறையினரின் சீரழிவையும் தடுக்க முடியும்.

புதிய சட்டம் தேவை
அதற்காக உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்!ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் முன்னேற்றம் இல்லாமல் கிடக்கிறது. அதில் சாதகமான தீர்ப்பும் கிடைக்காது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications