வேட்பாளரையே கடத்துறாங்க..இதுதான் திமுக ஜனநாயகமா? ட்விட்டரில் கேள்வி எழுப்பும் பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை : வேலூர் மாநகராட்சி தேர்தலில் பாமக வேட்பாளர் கடத்தி மிரட்டியுள்ளதாகவும் இது தான் திமுகவின் ஜனநாயகமா என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் வேட்பு மனு தக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மாறி மாறி வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்காளர்களை கவர்வதற்காக பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சி
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடுவதற்கு திமுக அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேயர் தேர்தலுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 31 வார்டுகளில் வெற்றி பெறுபவர் மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

பாமக வேட்பாளர்
அதிமுக திமுக போலவே பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களம் இறங்குகின்றன. பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 24 மாவட்டத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் பரசுராமன் என்பவரை திமுக மாவட்ட செயலாளர்கள் இருவர் கடத்தி சென்று போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என மிரட்டுவதாக தகவல் வெளியானது. போட்டியிலிருந்து விலகாவிட்டால் தொழில் செய்ய முடியாது என மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் கண்டனம்
இந்நிலையில் வேட்பாளர்களை காட்டி மிரட்டுவது தான் திமுகவின் ஜனநாயகமா என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் இருவர் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது!"

வேட்பாளர்களை மிரட்டக் கூடாது
மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்டக் கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என அந்த பதிவில் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications