அதிமுக - திமுகவுக்கு ஜெர்க்.. ஒன்று சேரும் பனையூர் கட்சிகள்? விஜய்யுடன் கூட்டணி வைக்கும் அன்புமணி?
சென்னை: செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்திருப்பது அந்த கட்சியினரை உற்சாகம் அடைய செய்திருக்கிறது கோபிசெட்டிபாளையத்தை தவிர அவருக்கு செல்வாக்கு இல்லை என்று கூறினாலும், அரசியலில் பழுத்த அனுபவமும், சில கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வரும் அவரது வியூகமும் தவெகவுக்கு கைகொடுக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திமுகவுக்கு எதிர் கூட்டணி என அன்புமணி ராமதாஸ் பேசி இருக்கும் நிலையில், அது அதிமுகவா? தவெகவா? என உறுதியாக சொல்லவில்லை. இந்த நிலையில் விஜய் பக்கம் அன்புமணி நகரலாம் என்ற பேச்சு அதிமுக - திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
விஜய் அரசியலுக்கு வரும்போது, 'என்னோட கேரியரின் உச்சத்தை விட்டுட்டு" சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அரசியலுக்கு வந்துருக்கேன் என பஞ்ச் பேசினார். மாநாட்டில் லட்சக்கணக்கில் திரண்டிருந்த அவரது ரசிகர்கள் இதனை பெருமையுடன் கொண்டாடினர்.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் எதிர்க்கட்சிகளால் விஜயின் அரசியல் பாதை கேலி, விமர்சனம், சாடல் என பலவிதமான எதிர்வினைகளை எதிர்கொண்டது அதோடு, விஜயின் தொடக்க அரசியல் பேச்சுகள் சாதாரண வாக்காளர்களிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

விஜய்
மேலும், அவரை சுற்றி இருந்த புஸ்ஸி ஆனத், நிர்மல், ஆதவ் போன்ற அரசியல் அனுபவமற்ற நபர்கள் கட்சியை வழிநடத்தத் தகுதியற்றவர்கள் என பொதுவாக கட்சிக்குள் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையை தீவிரமாக உணர வைத்த சம்பவம் கரூர் கூட்டம் எனலாம். அந்த நிகழ்வின் பின்னர் தான், கட்சியை வழிநடத்துவடில் உள்ள குறைபாடுகளை விஜய் நேரடியாக உணர்ந்ததாகவும், அரசியலில் தன்னைச் சுற்றியிருந்தவர்கள் 'டம்மி பீஸ்கள்' என்று உணர முடிந்ததாகவும் த.வெ.க., வட்டாரங்கள் கூறுகின்றன.
செங்கோட்டையன்
இத்தகைய சூழ்நிலையில், அரசியல் அனுபவம் மிக்க ஒருவரின் தேவை விஜய்க்கு அவசியமானதாக இருந்தது. அதற்கான சரியான தேர்வாக முன்னாள் அமைச்சர், 9 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தவெக தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆனபோதும், கட்சி வலுவாக முன்னேறாத சூழலில், செங்கோட்டையனின் வருகை தவெகவுக்கு புத்துயிஊட்டியதாக கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுடன் நெருங்கிய அனுபவம் கொண்ட செங்கோட்டையனின் அரசியல் அறிவு, தவெகவின் நிலையை சற்று உயர்த்தியுள்ளது.
பாமக
இது ஒருபுறம் இருக்க தவெகவை நோக்கி சில கட்சிகள் திரும்பலாம் என்ற பேச்சும் அக்கட்சியினர் உற்சாகபடுத்தியுள்ளது. பாமக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெகவை தங்கள் கூட்டணி ஆப்சனில் வைத்துள்ளன. குறிப்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிரான அணியுடன் தான் கூட்டணி அமைப்போம் என்று கூறியது புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவா? இல்லை தவெகவா? என்பது இப்போது எழுந்திருகும் கேள்வி.
அன்புமணி
டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தற்போது பயணிக்கும் பாதை பனையூரை நோக்கி இருப்பதால், பாமகவும் அதே திசையில் நகர வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் விஜய்க்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தன் கட்சியின் மீது மற்ற கட்சிகள் நம்பிக்கை காட்ட ஆரம்பித்துவிட்டன என்பது விஜய்க்கு பெரிய ஊக்கமாக மாறியிருக்கிறது. ஆனால் இதுவே திமுகவுக்கு அதிர்ச்சியாக மாறியுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையனை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க முயன்ற திமுக தோல்வி கண்ட நிலையில், பாமகவும் தவெக பக்கம் சாய்வதாக உலாவும் தகவல் ஆளுங்கட்சிக்கு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications