சென்னை வடபழனி மசூதியை அதிகாலையில் சூறையாடிய போதை நபர் குறித்து காவல்துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வடபழனி காயிதுல் மில்லத் அல் மஸ்ஜிதுல் ஹமீதிய்யா & மதரஸா மசூதிக்குள் இன்று அதிகாலை போதையில் நுழைந்த ஒரு நபர், அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினார். அத்துடன், அங்கிருந்தவர்களை மிகவும் அசிங்கமாகவும், அவதூறாகவும் பேசியதுடன், தாக்கவும் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மசூதிக்குத் தொழுகைக்கு வந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வடபழனி போலீசார், சம்பவ இடத்திலேயே உடனடியாக அவரைக் கைது செய்தனர். பொருட்களைச் சேதப்படுத்தியபோது கையில் காயமடைந்த அந்த நபர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை கூறியிருந்தது.

சென்னை வடபழனி, கங்கையம்மன் கோயில் தெருவில் காயிதுல் மில்லத் அல் மஸ்ஜிதுல் ஹமீதிய்யா & மதரஸா மசூதி அமைந்துள்ளது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக மசூதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, போதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒருவர், மசூதியின் பிரதான நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளார்.

Police statement about intoxicated individual who vandalized Vadapalani mosque in Chennai at dawn

அங்கு இருந்த புனித குர்ஆன், மேசை, நாற்காலிகள், வைஃபை உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்துச் சேதப்படுத்தினாராம். அப்படிச் சேதப்படுத்தும் முன்பு, நேரடியாகச் சென்று சிசிடிவி கேமராக்களின் மெயின் லைனைத் துண்டித்தாராம். அதன்பிறகே கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினாராம். அடக்க முயன்றவர்களையும் தாக்கினாராம். மேலும், மசூதியின் ஜன்னல் கண்ணாடிகளையும் அவர் அடித்து நொறுக்கியுள்ளார்.

இதைக் கண்ட அங்கு தொழுகைக்காக வந்தவர்கள் உடனடியாக வடபழனி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த நபரைப் பிடிக்க முயன்றுள்ளனர். அவர் போலீசாரையும் மோசமாகத் தாக்கியதாகவும், அசிங்கமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த நபரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, அந்த நபர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார்.

மசூதியில் இருந்த கண்ணாடிகளை உடைத்ததில் அந்த நபரின் கையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிக் கொண்டே இருந்தது. அவர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மசூதிக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்திய சம்பவத்தைக் கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் மசூதி முன்பு திரண்டார்கள். சம்பந்தப்பட்ட நபர் திட்டமிட்டு, வேண்டுமென்றே இப்படிச் செய்திருக்கிறார். இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபடத் திரண்ட இஸ்லாமியர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:

"போதையில் காயிதுல் மில்லத் அல் மஸ்ஜிதுல் ஹமீதிய்யா & மதரஸா மசூதிக்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்திய நபரை வடபழனி காவல் குழுவினர் சம்பவ இடத்திலேயே உடனடியாகக் கைது செய்தனர். பொருட்களைச் சேதப்படுத்தியபோது கையில் காயமடைந்த அந்த நபர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, சென்னை R8 வடபழனி காவல் நிலையத்தில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின்போது, பிடிபட்ட நபர் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், அவர் இச்சம்பவத்தின்போது மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக, பிடிபட்ட நபரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விசாரணையில், பிடிபட்ட நபர் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. பிடிபட்ட நபர் தொடர்ந்து காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவசியமான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்ற பிறகு, அவர் உரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+