சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது லிஸ்ட்லேயே இல்லையே.. ரஜினி போட்டியிடுவாரா மாட்டாரா.. வாசகர்கள் கொடுத்த திக்திக் தீர்ப்பு..!

ரஜினி எந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருக்கும் என்ற கருத்து நம் வாசகர்களிடம் கேட்கப்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் கட்சிஆரம்பிப்பது என்பது செவ்வாய் கிரகத்துக்குப் போய் மண்ணை அள்ளிட்டு வர்றதுக்கு சமமாக மாறி வருகிறது. அப்படி ஒரு மலையைப் பிடித்து இழுக்கும் சமாச்சாரமாகி விட்டது. இந்த நிலையில் அவர் எங்கு போட்டியிட்டால் வெல்லலாம் என்பது குறித்து வாசகர்களிடையே சுவாரஸ்யமான கருத்து எழுந்து வருகிறது.

ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதிதான் முழுமையாக வாயைத் திறக்கப் போகிறார். புதிய கட்சி, அரசியல் பிரவேசம், தேர்தலில் போட்டி, கூட்டணி என எல்லாவற்றையும் அன்றே சொல்வாரா அல்லது அதற்கும் தனியா நாள் குறிப்பாரா என்று தெரியவில்லை.

இந்த நிலையில் ரஜினி எங்கு போட்டியிட்டால் நல்லாருக்கும் என்று ஒரு கேள்வியை வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு செமத்தியான பதில் கிடைத்துள்ளது.

 ஆப்ஷன்கள்

ஆப்ஷன்கள்

வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு, காவிரி டெல்டா, கொங்கு மண்டலம் என்று தமிழகத்தைப் பிரித்தும், எங்கும் போட்டியிட மாட்டார் மற்றும் முதல்ல கட்சி ஆரம்பிக்கட்டும் என்றும் ஆக 6 ஆப்ஷன்கள் தரப்பட்டிருந்தன. அதற்கு வந்துள்ள பதில் எதிர்பார்த்ததுதான். ஆமாங்க. "முதல்ல கட்சியை ஆரம்பிக்கட்டும்" என்ற ஆப்ஷனுக்குத்தான் அதிக வாக்குகள் (57.07%) கிடைத்துள்ளன.

வடக்கு

வடக்கு

அதைத் தவிர்த்து விட்டு எந்த மண்டலம் என்று பார்த்தோமானால், வட தமிழகத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது "வடக்கில் ரஜினி நின்றால் வெல்லலாம்" என்பதே வாசகர்கள் பலரின் (9.63%) கருத்தாக உள்ளது. ரஜினியை வடக்கு தமிழகத்திற்குத்தான் லாயக்கானாவர் என்று வாசகர்கள் நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை.

 தென் தமிழகம்

தென் தமிழகம்

ஒருவேளை தூத்துக்குடி தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் உள்ளிட்டவை காரணமாக தென் தமிழகத்தில் அவருக்கு செல்வாக்கு இல்லாமல் போய் விட்டதோ என்னவோ. "தென் தமிழகத்தில் போட்டியிடலாம்" என்று 4.48% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்த ஆப்ஷன்களில் ரஜினிக்கு 4வதாக கிடைத்துள்ள ஆப்ஷன் இது.

 போட்டியிட மாட்டார்

போட்டியிட மாட்டார்

"காவிரி டெல்டாவில் போட்டியிடலாம்" என்று 1.48 சதவீதம் பேரும், "கொங்கு மண்டலம்" என 1.96 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதையெல்லாம் விட சுவாரஸ்யமாக "போட்டியிட மாட்டார்" என 25 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் இது உண்மையாகவும் இருக்கலாம். ரஜினி தேர்தலில் போட்டியிடுவது என்பது நிச்சயம் பெரும் சந்தேகம்தான்.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்த கருத்துக் கணிப்பு சும்மா மக்களின் மன நிலையை அறியும் ஒரு சிறிய முயற்சிதான். விரிவானது அல்ல. இருப்பினும் இதை வைத்துப் பார்க்கும்போது ரஜினி தேர்தலில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் இன்னும் வரவில்லை என்பதே புலப்படுகிறது.

English summary
Poll: In which constituency is Rajinikanth likely to contest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X