பொங்கல் பரிசு தொகுப்பு அப்டேட்: ஜனவரி 10க்குள் பொங்கல் பரிசு.. ரூ.5,000? அமைச்சர் காந்தி சொன்ன பதில்
சென்னை: தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அப்டேட் வந்துள்ளது. ஜனவரி 10 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரூ.5000 ரொக்கம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் காந்தி பதில் அளித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்து, வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், சுமார் 3000க்கும் மேற்பட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டதில் 500 நபர்கள் பல்வேறு தனியார் துறை நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறுகையில், தமிழக முதலமைச்சர் அறிவித்தவுடன் பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் பணியை துவங்கி ஜனவரி 10 ஆம் தேதிக்குள் பொதுமக்களுக்கு வழங்கும் பணி நிறைவடையும் எனத் தெரிவித்தார்.
எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு கிடைக்க உள்ளது. 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்விக்கு பிறகு பார்க்கலாம் என மழுப்பலாகக் கூறினார் அமைச்சர் காந்தி.
அதிமுக ஆட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 ரொக்கமாக கொடுக்கப்பட்டது. அதுவே இதுவரை பொங்கல் தொகுப்போடு கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரொக்கம். இதைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் பணம் தரப்படவில்லை.
இந்நிலையில் வரும்ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் ரொக்கப் பணம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் மகளிர் உரிமை தொகை மாதம் வழங்குவதால் நிதி நெருக்கடி சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, பொங்கல் தொகுப்பு தயாராக உள்ளது. முதலமைச்சர் அறிவித்த உடன் கொடுக்கப்பட்டு ஜனவரி 10 தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிந்துவிடும் என்றார். மேலும் பொங்கல் பரிசு தொகை 5000 வழங்கப்படுமா என கேட்ட கேள்விக்கு அதெல்லாம் பிறகு தான் என மழுப்பலாக பதில் அளித்தார்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications