பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் வீடு தேடி வரும்..பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் மக்களே!
சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் தமிழகம் முழுவதும் இன்று முதல் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட உள்ளது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்த நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெறவும் ஸ்மார்ட் கார்ட்டுடன், கைரேகையும் பதிவு செய்ய வேண்டும். ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு முறை அவசியமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. அதைதொடர்ந்து, பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே இன்று முதல் பயனாளர்களின் வீடுகள் தோறும் நேரடியாகச் சென்று விநியோகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், தெரு அல்லது வரிசை வாரியாக டோக்கன் வழங்கவும், டோக்கனில் விபரங்களை சரியாக குறிப்பிட்டு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்த நேரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற குடும்ப அட்டைதாரர் கடைக்கு வர வேண்டும் என்பது அதில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இது பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்கவும், ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்க முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொங்கலுக்கு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்கள் உட்பட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மொத்தமாக உள்ள 2,19,14,073 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,268 குடும்பங்கள் என மொத்தம் 2,19,33,242 பயனர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக 2,357 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி 2 ஆம் தேதி துவக்கி வைக்க உள்ளார். அன்றுமுதலே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 13 ஆம் தேதிக்கு முன்பாக இந்த பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முடித்து விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்காக பயனாளர்கள் ஒரே நேரத்தில் கூடி, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்த நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 13ம் தேதி போகிப் பண்டிகை தொடங்குவதற்கு முன்பு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசு வழங்கி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, பயனாளர்களின் குடும்பத்தில் ஒருவரது கைவிரல் ரேகை பதிவு அவசியம். அதேபோல பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெறவும் ஸ்மார்ட் கார்ட்டுடன், கைரேகையும் பதிவு செய்ய வேண்டும். ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவரின் கைரேகைப் பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும். பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்











Click it and Unblock the Notifications