பொங்கல் பரிசு ரூ.2500.. சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி? இன்று கடைசி நாள்!
சென்னை: பொங்கல் பரிசு ரூ.2500 வழங்கப்பட உள்ள நிலையில், சா்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்ற இன்று (டிச.20) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் 2.06 கோடி குடும்ப அட்டைகள் அரிசி பெறும் அட்டைகள் ஆகும்.
தமிழகத்தில் 2.01 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைகளும், 10 லட்சத்துக்கும் அதிகமான சா்க்கரை பெறும் அட்டைகளும் புழக்கத்தில் இருந்து வந்தன. கடந்த ஆண்டு நவம்பரில் சா்க்கரை அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்றிக் கொள்ள தமிழக அரசு வாய்ப்பு வழங்கியது.
அதன் பின்னர் , சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் அரிசி பெறும் அட்டைகளாக மாற்றப்பட்டன. இதனால், தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2.06 கோடியாக உயா்ந்திருக்கிறது.

எவ்வளவு மாற்றம்
இந்த சூழலில் சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 ஆக இருந்தது. . இந்த அட்டைகளை அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ள கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள விண்ணப்பத்துள்ளனர். இதனிடையே அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள இன்று (டிச. 20) கடைசி நாளாகும்.

பொங்கல் பரிசு
இதற்கிடையே பொங்கல் பண்டிகையை ஒட்டி, வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டத்தில் பிரச்சாத்தின் போது அறிவித்தார் இந்த அறிவிப்பு காரணமாக, சா்க்கரை அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்கான கடைசி வாய்ப்பாக அட்டையை, அரிசி அட்டையாக மாற்றக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

இணையதள முகவரி
சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளம் வாயிலாக (https://tnpds.gov.in/login.xhtml) சா்க்கரை அட்டைகளை அரிசி பெறும் அட்டைகளாக மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.

மாற்றுவோருக்கு பரிசு
இணையதளத்தின் வழியே விண்ணப்பித்துள்ள மனுக்கள் மீதான பரிசீலனை வரும் திங்கள்கிழமை (டிச.21) முதல் தொடங்க உள்ளது. இந்தப் பணிகளை டிசம்பா் இறுதிக்குள் முடிக்க உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. இதன்பின்பு, அரிசி அட்டையாக மாற்றப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.2,500 ரொக்கத் தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications